Thursday 31 October 2013

ஆசை ஆசையாய் !

இதமான காற்று....
சுகமான சாரல்மழை
கனமழைக்கு பிறகு அமைதியான நிசப்தம்
ஆனந்தக் கண்ணீர் சொட்டும் மரங்கள்
தெருவோரங்களில் விரைந்தோடும் ஜில்லென்ற நீர்....


“நாளையிலிருந்து தீபாவளி விடுமுறை”
மனம் ஆர்ப்பரிக்கிறது சாமிநாதனுக்கு....
பாக்கெட்டில் இருக்கும் மொபைல் சினுங்கவே
டீக்கடையோரம் பைக்கை நிறுத்துகிறான் சாமிநாதன்!
”என்னங்க, ஆபிஸ்விட்டு கிளம்பியாச்சா?” என்ற மனைவின் கேள்விக்கு
”ஆச்சுமா” என்று பதிலளித்துவிட்டு...
எங்கேயோ டயல் செய்கிறான்!
“மேடம் அனுப்பிட்டிங்களா?”
“அனுப்பியாச்சு சார்! நாளைக்கு கிடைக்கும்”
எதிர்முனை பதிலால்
மலர்கிறது முகம்! 

”அப்பா, நாங்க எப்பவோ ரெடி” என்ற மகனிடம்
“இதோ போகலாம்டா” என்று கூறிவிட்டு
மனைவி தந்த டீயை பருகுகிறான் சாமிநாதன்!
”டேய் சாமிநாதா, உன் தங்கை பசங்களையும் மனசுல வச்சுக்கோடா”
உள்ளறையிலிருந்து அம்மாவின் குரல்!
”ச்சே! இந்த பண்டிகையெல்லாம் ஏன்தான் வருகிறதோ”
சற்றே சலிப்புடன் பைக்கை உதைக்க....
“என்னங்க போனஸ் பணம் எடுத்துட்டிங்களா”
கேட்டுக்கொண்டே அமரும் மனைவியையும்...
எதிர்வீட்டு சிறுமியை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டே
அமரும் மகனுடனும்...
பைக்கை விரட்டுகிறான் சாமிநாதன்!

மனிதர்களுக்குத்தான்
எத்தனை கஷ்டங்கள்,
எத்தனை எத்தனை பிரச்சனைகள்!
ஆனால்....
பண்டிகை என்று வந்துவிட்டால்
தானும் சந்தோஷப்பட்டு
மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துவதில்தான்
எவ்வளவு ஆனந்தம்!

இதோ.....
கடைவீதிகளில்தான்
எவ்வளவு மனிதர்கள்!
ஜவுளி கடைகளில்பேரம் பேசும்
பலதரப்பட்ட குரல்கள்!
சிறிதேனும் தன் குடும்பத்தாரை
சந்தோஷப்படுத்தவேண்டும் எனத்துடிக்கும்
மனித மனங்கள்!

“என்னங்க, என் தங்கச்சி பசங்களுக்கு”
என்ற மனைவியை முறைத்தாலும்,
அவள் ஆசையை நிராகரிக்காமலும்...
“அப்பா, இன்னும் கொஞ்சம் பட்டாசுப்பா” என்று
அடம்பிடித்த மகனையும் சமாளித்துவிட்டு,
வீடு வந்து சேர்ந்தபோது
இரவு மணி பதினொன்றை தொட்டிருந்தது கடிகாரம்!

மறுநாள்....
தீபாவளிக்கு முதல் நாள்
பிற்பகலில் அவசரமாக கிளம்பி
கொரியர் வாசலில் நிற்கிறான் சாமிநாதன்!
”இன்னும் வரலையே”
என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்துவிட்டு
”நல்லா பாருங்க சார்” என்றான் உடைந்த குரலில்!
“ஓ சாரி சார், இதோ இருக்கு”
என்றவுடன்தான் மூச்சே வந்தது சாமிநாதனுக்கு!
பார்சல் கணத்தை கைகளில் உணர்ந்தான்!
இப்போது மழை முற்றிலும் நின்றிருந்தது!
மேகக்கூட்டங்களின் விடுதலையிலிருந்து
சூரியன்  சந்தோஷமாய் எட்டிப்பார்த்தான்!


தீபாவளியன்று மாலைவரை
வேலைபளுவால் பார்சலை பிரிக்கமுடியவில்லை!
ஆனால்...
அவன் மனம் அதைச்சுற்றியே இருந்தது!
இரவு கவிழும் நேரம்,
இனியும் தன்னால் பொருக்க முடியாது என்பதால், 
தன் அறைக்குச் சென்று
பார்சலை பிரித்தான் சாமிநாதன்!
பளிச்சென்று வழுக்கியவாறு,
அவன் மடியில் வந்து விழுந்தது
“தீபாவளி ஸ்பெஷல்”

புத்தகத்தை திருப்பி திருப்பி பார்த்தான்!
ஆசையாய் தடவிக்கொடுத்தான்!
அவன் வாய் முனுமுனுத்தது
“ஆஹா எத்தனை ஆண்டுகள்”
அவன் நினைவுகள் சற்றே
பின்னோக்கிச் சென்றன!
’லயன் காமிக்ஸ் தீபாவளி மலர்’
தன் சிறு வயதில் வாங்கிப் படித்த
பரவச நினைவுகளில் மூழ்கினான்!
பால்ய வயதிலும்
காமிக்ஸ் படித்தோம்!
எதையும் யோசிப்பதில்லை!
உற்சாகம் மட்டுமே மனதில்!

இன்றோ...
இந்தவயதிலும் படிக்கிறோம்!
எவ்வளவோ குறை சொல்கிறோம்!
ஒரிஜினலுடன் ஒப்பிடுகிறோம்!
மொழிபெயர்ப்பு கோணல் என்கிறோம்
ஏதோ தமிழறிஞர்கள்போல!
ஓவியங்களை பழிக்கின்றோம்
கலைமாமனிகள் போல!
பைண்டிங் சரியில்லை,
பசை ஒட்டவில்லை,
மை சரியில்லை 
என்றெல்லாம்கூட கலாய்க்கின்றோம்!
ஆனால்....
ஆயிரம் குறைகண்டாலும்
படிக்காமல் விட்டு விடுகிறோமா?
காமிக்ஸ் காதல் என்பதுதான்
பொய்யாகிடுமா?

இதோ....
பக்கங்களை புரட்டுகிறான் !
வெட்டவெளிகளும்,
பாலைவனங்களும்,
மலைக்குன்றுகளும்,
குதிரைகளும்,
செவ்விந்தியர்களும்.... 
அவன் கண்முன்னே விரிந்தன!
தன் வயதை மறந்தான்...
தன்னை சுற்றி நடப்பவைகளை மறந்தான்.....
பட்டாசு சத்தங்கள் அவன் காதில் விழவில்லை......
“பொம்ம புத்தகம் படிக்க ஆரம்பிச்சிட்டியா”
அம்மாவின் குரலை அலச்சியபடுத்தினான்....
“இனி இந்த உலகம் இவருக்கு மறந்துவிடும்” என்று
தலையில் அடித்துகொண்டே செல்லும்
மனைவியை கண்டுகொள்ளவில்லை....
அனைத்துக் கவலைகளையும் மறந்தான்!
காமிக்ஸ் காதல் அவனை
கட்டிப்போட்டது!
இருபது ஆண்டுகள்
பின்னோக்கிச்சென்ற உணர்வு!
அவனை தனக்குள் இழுத்துக்கொண்டது காமிக்ஸ்!


விடுமுறை முடிந்தது....
அலுவலகம் கிளம்புகிறான் சாமிநாதன்!
”அப்பா, அடுத்த தீபாவளிக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்காப்பா”
மகனின் ஆதங்கக் கேள்வி!
பதில் ஏதும் கூறாமல்
பைக் சாவியுடன் திரும்பும் சாமிநாதனின்,
ஆதங்கப் பார்வையிலிருந்து அகலமறுக்கிறது
டேபிளில் பளிச்சென்று சிரிக்கிறது!
டெக்ஸ் வில்லரின்
“தீபாவளி ஸ்பெஷல் 2013”



ஆசிரியரின் மடல் (காமிக்ஸ் டாட் காம்)




இரண்டு கதைகளின் ஆரம்ப பக்கங்கள்  உங்கள்  பர்வைக்கு!




இதுவரை பதிவை முழுவதும் பொறுமையாக படித்த அனைவருக்கும் நன்றி!    உங்களுக்கு இது ஒரு கவிதையாகவோ அல்லது ஒரு சிறுகதையாகவோ அல்லது கதை-கவிதையாகவோ அல்லது மொக்கையாகவோ எப்படி தோன்றியிருந்தாலும் உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!


காமிக்ஸ் மினி டாட் காம்!

1.  'முதலைப்பட்டாளம்' நண்பர் கலீல் அவர்களின் மாலைமதி காமிக்ஸ் பற்றிய ஒரு அதிரடி பதிவு! அவரது ஸ்பெஷல் பானியில்!
mudhalaipattalam.blogspot.in/2013/10/afi.html?

2.   நண்பர் ராஜ் முத்துக்குமார் அவர்களின் ’மன வானில்’ அக்டோபர் மாத இதழ்களின் விமர்சனப்பதிவு!
http://www.comicsda.com/2013/10/xii-bluecoats-tamil.html

3.   நண்பர் சௌந்தர் அவர்களின் தீபாவளி இதழ்களின் சுடச்சுட பதிவிற்கு
http://tamilcomics-soundarss.blogspot.in/2013/10/108-lion-comics-deepavali-malar-2013.html



இப்போதைக்கு அவ்வளவுதான் நண்பர்களே!  விரைவில் சந்திப்போம்!

அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்










24 comments:

  1. வந்தோம்ல பர்ஸ்ட் ஹி ஹி

    ReplyDelete
  2. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே !!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! தங்களுக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே !

      Delete
  3. கவித கவித. ஹி ஹி மடக்கி மடக்கி எழுதி இருந்தீங்களா அது தான். சூப்பர் ரொம்ப நல்லா இருந்தது. நிறைய எழுத ட்ரை பண்ணுங்க. ஆனால் அத்தனையும் சத்தியமான வார்த்தைகள்.

    ReplyDelete
  4. உங்கள் கவிதைப் போன்றக் கதையைப் படித்தவுடன் ஏனோ என் கண்கள் கலங்கிவிட்டன. உங்களின் எழுத்துக்களில் எங்களின் உணர்வுகள் வெளிப்படுகின்றன. நெஞ்சம் வரை நிறைந்து விட்ட ஒன்றை எந்நாளும் மறக்கமுடியாதுதான். அழகாக எழுதியிருக்கீர்கள், Fantastic, keep it up.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகையும், நெகிழ்ச்சியான கருத்துகளும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது! நன்றி நண்பரே!!!

      Delete
  5. அழகு...
    உங்கள் வார்த்தையும் .உண்மையும் ....நன்றி ..
    இனிய தீபாவளி வாழ்த்துகள் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! தங்களுக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே !

      Delete
  6. சார்.. சூப்பர் கலக்கிட்டீங்க! அருமையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் சார்...

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்!

      Delete
    2. நன்றி செந்தி்ல் சார்! தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

      Delete
  7. அந்த சாமிநாதனே
    நீங்க தான சார்?! :P

    ஏங்க, ஒரு கட்டுரையை
    குட்டி குட்டி லைனா எழுதுனா
    அது கவிதை ஆயிடுமா?! ;)

    சரி விடுங்க,
    நாட்டுல எல்லாரும்
    இதைத் தானே பண்றாங்க!

    நல்ல முயற்சி!
    தீபாவளி
    நல்
    வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. அட, நீங்களும் கவிதையில்
      கலக்கிறிங்க!
      சூப்பர்!!!

      தீபாவளி
      நல்
      வாழ்த்துக்கள்!
      கவிஞரே!!! :)

      Delete
    2. அப்புரம்
      அந்த
      சாமிநாதன் நானில்லை!
      இப்போதும்
      காமிக்ஸ் வாசிக்கும்
      உங்களைப்போன்ற
      முதிர்ந்த வாசகர்களே!!! :)

      Delete
  8. தீபாவளி
    நல்
    வாழ்த்துக்கள்!
    கவிஞரே!!! :)

    ReplyDelete
  9. நன்றி ராஜ் குமார் சார்!

    ReplyDelete
  10. Enjoyed the post, lot of people including myself have the same feeling while getting or comics parcel.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. எல்லோர் வாழ்விலும் நடக்கும் நிகழ்ச்சிகளை அப்படியே படம் பிடித்து காட்டிவிட்டீர்கள் சார். இதை 2013 தீபவளி அன்று படித்தபோது அன்று முழுதும் இந்த சாமிநாதனைப் பற்றிதான்.குடும்பம் மற்றும் நம்மைச்சுற்றி உள்ளவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயத்தில் சந்தோசம் என்றால் நமக்கு காமிக்ஸ்தானே சந்தோசம்.!அட்டகாசம் சார்.இவ்வளவு நாள் உங்ளைப் பற்றி தெரியாமலே மௌன வாசகனாக இருந்துள்ளேன் சார்.இதேப்போல் தொடரந்து பதிவிடுங்கள் சார்.!

    ReplyDelete