Wednesday, 23 July 2014

ஆகஸ்டில் ஒரு காமிக்ஸ் திருவிழா !

இன்னும் பத்தே நாட்கள்! காமிக்ஸ் ஆர்வலர்கள் மத்தியில் ஒரு பரபரப்பும், சந்தோஷமான ஆர்ப்பரிப்பும், ஆர்ப்பாட்டங்களுக்கும் அளவில்லாமல் இருக்கும். இதற்கு காரணமாக இருக்கப்போவது  “லயன் காமிக்ஸ் 30 வது ஆண்டு மலர்” வெளியாகும் நாள் ஆகஸ்ட் 2 ம் தேதி! 

ஒரு பதிப்பகம்,  அதிலும் காமிக்ஸ் கதைகள் வெளியிடும் ஒரு நிறுவனம், தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக புத்தகங்களை வெளியிடுவது என்பது சுலபமான விஷயம் அல்ல. சில ஆயிரங்களில் குறுகிப்போன வாசகர்களுக்காகவே தொடர்ந்து தமிழில் காமிக்ஸ் கதைகளை வெளியிடும் காமிக்ஸ் காதலர் எடிட்டர் விஜயன் அவர்களுக்கும், அவர் நிர்வகிக்கும் பிரகாஷ் பப்ளிஷர் நிறுவனத்திற்கும்  இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்.

1984 முதல் 2014 ஆகஸ்ட் வரை லயன் காமிக்ஸ் வெளியீடுகளின் பட்டியல் (நன்றி : எடிட்டர் விஜயன் வலைப்பூ)


The லயன் MAGNUM ஸ்பெஷல் !

முப்பது ஆண்டுகளில் இதுபோல் ஒரு காமிக்ஸ் இதழ் வந்ததில்லை என்று பிரமிக்கும் வகையில் மிக பிரமாண்டமாக வெளிவரவுள்ள “தி லயன் மேக்னம் ஸ்பெஷல்” புத்தகத்தில் இடம்பெறவுள்ள கதைகளின் விபரங்கள் கீழே.....




இதனை தொடர்ந்து எடிட்டர் விஜயன் தன்னுடைய பிளாகில் வெளியிட்ட கதைகளின் ட்ரைலர்களில் சில.....

 டெக்ஸ் வில்லரின் “சட்டம் அறிந்திரா சமவெளி” !


 

C.I.D ராபின் துப்பறியும் “நிழல்களின் நினைவுகள்” !


 

திகில் டிடெக்டிவ் டைலன் அறிமுகமாகும் “அந்தி மண்டலம்” !

 


தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் “தி லயன் மேக்னம் ஸ்பெஷல்” அனைத்து தரப்பு ரசிகர்களையும் நூறு சதவிகிதம் பூர்த்தி செய்யும் என நம்பலாம்!

அதே சமயம் இந்த ஸ்பெஷல் இதழ் வெளிவரும் முன்பே சில சர்ச்சைகளையும் ஏற்படுத்த தவறவில்லை.

இதழின் தயாரிப்பு மற்றும் குறைந்த அளவு முன்பதிவுகள் பற்றிய எடிட்டரின் "வரவு எட்டணா..செலவு பத்தணா” என்ற பதிவும், அதனை தொடர்ந்து வாசகர்களின்  பின்னூட்டங்களும் ரொம்பவே சுவராஸ்யமானது! 

”நான் 10 புத்தகங்கள் வாங்குவேன், 20 புத்தகங்கள் வாங்குவேன்” என்றெல்லாம் சொல்லப்போவதில்லை! ஆனால், எனது இந்த தளமும், பதிவும் காமிக்ஸ் ஆர்வம் இல்லாத ஒருவரையாவது இந்த 30வது ஆண்டு மலரை வாங்கத் தூண்டுமேயானால் காமிக்ஸ் ரசிகனான எனக்கு அளவில்லா சந்தோஷமே!! 

"The லயன் MAGNUM ஸ்பெஷல்” இதழுக்கான  ஆன்லைன் புக்கிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது! http://lioncomics.worldmart.in/index.php?categoryID=36 என்ற முகவரிக்கு சென்று இன்றே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்! ஆகஸ்ட் 2 ம் தேதியிலிருந்து “ஈரோடு புத்தக திருவிழா”விலும் நேரடியாக வாங்கிக்கொள்ளலாம்.    



21 comments:

  1. "LMS"previw patriya muzhu thokuppaka ipathivu uladhu thodaravum...

    ReplyDelete
  2. Replies
    1. ம்ம்ம்... நடத்துங்க!

      வருகைக்கு நன்றி தினா சார்!

      Delete
  3. மிகுந்த தயக்கத்துடன் தான் இருந்தேன் விஸ்வா. நான் இது வரை காமிக்ஸ் வாங்க கணக்கு பார்த்ததே இல்லை. அனால் இந்த முறை விலை மற்றும் குடும்ப budget எனது காமிக்ஸ் வாங்கும் தீர்மானத்தை தள்ளி வைத்து விட்டது. இருந்தாலும் உங்கள் பதிவை படித்த பின் சும்மா இருக்க முடியவில்லை. நீண்ட நேரம் எடுத்து கொண்டு ஒரு வழியாக ஆர்டர் செய்து விட்டேன். இருந்தாலும் ஆசிரியர் திரு. விஜயன் அவர்கள் ஒவ்வொரு கதையையும் தனி இதழாக வாங்க கூடிய விலையில் போட்டால் என் போன்றோருக்கு உவப்பாக இருக்கும்.

    இதை ஏன் கூறுகிறேன் என்றால் ஒரு தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளையும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று உறுதி கூற முடியாது. குறிப்பாக எனக்கு ஜில் ஜோர்டான், டயபாலிக் , ரிபோட்டர் ஜானி, போன்ற கதைகள் பிடிக்காது. அனால் இதை எல்லாம் ஒரே package விற்கும் போது கடுப்பாக இருக்கிறது.

    விங் காமண்டர் ஜார்ஜ் நினைவிருக்கிறதா? எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் அவர். நான் பொதுவாக என்னை வெளிப்படுத்தி கொள்வதில்லை. ஏனோ இன்று என் எண்ணத்தை வெளிபடுத்த வேண்டும் என்ற ஆவல் உங்கள் “ ஆகஸ்டில் ஒரு காமிக்ஸ் திருவிழா !” பதிவை படித்த பின் ஏற்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் டாக்டர். நலமா?

      நீண்ட நாள் கழித்து இங்கே கமெண்ட் இட வந்துள்ளீர்கள். அதற்க்கு முதலில் நன்றி. (அதுவும் இந்த ஐடியில் நீங்கள் பதிவிடுவதை நான் இப்போதுதான் பார்க்கிறேன்).

      //மிகுந்த தயக்கத்துடன் தான் இருந்தேன்.நான் இது வரை காமிக்ஸ் வாங்க கணக்கு பார்த்ததே இல்லை. அனால் இந்த முறை விலை மற்றும் குடும்ப budget எனது காமிக்ஸ் வாங்கும் தீர்மானத்தை தள்ளி வைத்து விட்டது. இருந்தாலும் கிங் விஸ்வாவின் பதிவை படித்த பின் சும்மா இருக்க முடியவில்லை. //

      மிகவும் நன்றி.

      ஆனால் ஒரு சிறிய திருத்தம்.

      இந்த பதிவு பாண்டிச்சேரியை சேர்ந்த மூத்த பதிவரும், காமிக்ஸ் ரசிகருமாகிய திரு வி. கார்த்திகேயன் சாருடைய பதிவாகும்.

      ஆகவே இந்த பாராட்டு உண்மையாக அவரையே சாரும்.

      கார்த்திகேயன் சார்,, இதற்க்காகத்தான் உங்களை அடிக்கடி பதிவிட சொல்கிறேன். இதுதான் உங்களின் பதிவுகளின் மதிப்பு. இதற்க்காகவே ஆயினும் நீங்கள் அடிக்கடி பதிவிட கோரிக்கை வைக்கிறேன்

      Delete
    2. தங்கள் வருகைக்கும், தங்கள் கருத்துகளுக்கும் நன்றி திரு கலை அமுதன் சார்!

      //உங்கள் பதிவை படித்த பின் சும்மா இருக்க முடியவில்லை. நீண்ட நேரம் எடுத்து கொண்டு ஒரு வழியாக ஆர்டர் செய்து விட்டேன்.//

      ஆஹா இந்த பதிவால் இதைவிட எனக்கு வேறு சந்தோஷம் கிடைக்க முடியாது சார்! நன்றி! :)

      // நான் பொதுவாக என்னை வெளிப்படுத்தி கொள்வதில்லை. ஏனோ இன்று என் எண்ணத்தை வெளிபடுத்த வேண்டும் என்ற ஆவல் உங்கள் “ ஆகஸ்டில் ஒரு காமிக்ஸ் திருவிழா !” பதிவை படித்த பின் ஏற்பட்டது //

      உங்கள் வார்த்தைகள் மேலும் எழுதும்படி ஊக்கபடுத்துவதாகவும், பெருமையாகவும் இருக்கிறது!

      Delete
    3. //இந்த பதிவு பாண்டிச்சேரியை சேர்ந்த மூத்த பதிவரும், காமிக்ஸ் ரசிகருமாகிய திரு வி. கார்த்திகேயன் சாருடைய பதிவாகும்//

      மூத்த பதிவர் என்பதெல்லாம் சீனியரான உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெறியல விஸ்வா ஜி! :)

      ஒரு சின்ன திருத்தம் விஸ்வா ஜி, நான் P. கார்த்திகேயன் :)

      //இதற்க்காகத்தான் உங்களை அடிக்கடி பதிவிட சொல்கிறேன். இதுதான் உங்களின் பதிவுகளின் மதிப்பு. இதற்க்காகவே ஆயினும் நீங்கள் அடிக்கடி பதிவிட கோரிக்கை வைக்கிறேன்//

      இதுதான் தங்களிடம் பிடித்ததே! எந்த ஈகோவும் பாராமல் என்னை போன்ற கற்றுகுட்டி பதிவர்களுக்கும் கமெண்ட் இடுவதும், அவர்களை ஊக்கப்படுத்துவதும்!

      மிகவும் நன்றி விஸ்வா ஜி!

      Delete
  4. காமிக்ஸ் ரசிகர்களின் சார்பாக ஒரு மாபெரும் "நன்றி " நண்பரே ....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நான்தான் தங்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன் நன்பரே!

      Delete
  5. காமிக்ஸ் காதல் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. யெஸ் வாழ்க! வாழ்க! :-)

      Delete
  6. ஆகஸ்டில் ஒரு காமிக்ஸ் திருவிழா
    தொகுப்பு அருமை கார்திகேயன் சார்!
    திருவிழாவில் சந்திப்போம் !!!

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. இன்று யதேச்சையாக ஆன் லைனில் லக்கி லூக்கின்
    <a href="https://drive.google.com/open?id=0B6_nrl_IMG_20200507_014447.jpg''>The Bounty Hunter</a>
    அட்டைப்படம் பார்க்க நேர்ந்தது

    ReplyDelete
  11. இன்று யதேச்சையாக ஆன் லைனில் லக்கி லூக்கின்
    <a href="http://drive.google.com/open?id=0B6_nrl_IMG_20200507_014447.jpg''>The Bounty Hunter</a>
    அட்டைப்படம் பார்க்க நேர்ந்தது

    ReplyDelete
  12. லூக்கின்
    <a href="https://drive.google.com/file/d/1-FsRKiYjBELO_bQArgY4Zu_hAUeTs9s6/view?usp=drivesdk''>The Bounty Hunter</a> 

    ReplyDelete