Saturday, 2 August 2014

THE லயன் MAGNUM ஸ்பெஷல் - ஃபர்ஸ்ட் லுக் !

The Lion Magnum Special :

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “லயன் காமிக்ஸ் 30வது ஆண்டு மலர் - தி லயன் மேக்னம் ஸ்பெஷல்” கம்பீரமாக ஈரோடு புத்தகத் திருவிழாவில்  வெளியாகிவிட்டது. லயன் - முத்து பிரத்யேக ஸ்டாலில் பரபரப்பாக விற்பனையாவதாக நண்பர்கள் மூலம் வந்த செய்திகள் தெறிவிக்கின்றன! புதுவையிலிருந்து ஈரோடு புத்தகத் திருவிழாவில் நண்பர்களுடன் கலந்து கொள்ளும் எங்கள் ப்ளான் கடைசி நேரத்தில் பனால் ஆனது எனக்கு மிகுந்த வருத்தமே!  


பேக்கிங் :


ஒரே வார்த்தை, அசத்தல்! ரொம்பவே மெனக்கெட்டு, எந்த குறையும் சொல்லமுடியாத வகையில், சூப்பரான அட்டைப் பெட்டியில் இரண்டு வெவேறான சைஸ் புத்தகங்கள் கொஞ்சமும் டேமேஜாக வழியே இல்லாமல் மிக கவனமாகஅதேசமயம் நல்ல தரமாக பேக் பண்ணி வந்துள்ளது பாராட்டும்படி உள்ளது! இதற்கே நிறைய நேரம் விழுங்கியிருக்கும்!  எனக்கு வந்த புத்தகங்களின் பேக்கிங்கை பாருங்களேன்......








அட்டைபடங்கள் : 

LMS - புக் நெ . 1 :


பேக்கிங்கை பிரித்து புத்தகத்தை கையில் எடுக்கும்போதே வாசகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! அட்டகாசமான திக்கான அட்டைகள் (Hard Bound). காமிக்ஸ் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறிய முழு திருப்தி அளிக்கிறது. முன் அட்டையில் டெக்ஸ் கம்பீரமாக காட்சியளிக்க, பின் அட்டையும் கலர்ஃபுல்லாக இருக்கிறது. அட்டைப் படங்கள் மிதமான ஜிகினா வேலைப்பாடுகள் சூப்பர்!    



LMS - புக் நெ. 2 :


மேக்னம் ஸ்பெஷல் இரண்டாவது புத்தகம், வழக்கமான பெரிய சைஸில் நார்மலான அட்டைகளுடன் வெளிவந்துள்ளது. முன் அட்டையில் டைகர் சோலோவாக கம்பீரமாக போஸ் கொடுக்கிறார். பின் அட்டையில் லக்கி மற்றும் ரின் டின் கேன் என்று பல வண்ணங்களில் கவற்கிறது. ஆனால் முதல் புத்தகத்தை போலவே இதற்கும் சற்று மெனக்கெட்டிருக்கலாம். 





பேப்பர் குவாலிட்டி - கலர் & கருப்பு-வெள்ளை பக்கங்கள் :





மேக்னம் ஸ்பெஷல் முதல் புத்தகம் மொத்தம் 770 பக்கங்கள். அதில் 426 வண்ணப் பக்கங்கள். டெக்ஸ் 227 பக்கங்களில் கலரில் அதிரடி செய்கிறார். குறை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கலர் பக்கங்கள் கலக்கலாக உள்ளது. கருப்பு வெள்ளை பக்கங்களை பொறுத்தவரை “கம் பேக் ஸ்பெஷல்” புத்தகத்தில் பயண்படுத்திய தாள்களின் தரத்தில் கவர்கிறது. இந்த முதல் புத்தகத்தில் என்னை மிகவும் கர்ந்தது பைண்டிங் சர்வதேச தரத்தில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதே! 

மேக்னம் ஸ்பெஷல் இரண்டாவது புத்தகம் மொத்தம் 136 பக்கங்கள். அட்டை டு அட்டை பெரிய சைஸில்  கலரில் அசத்துகிறது. 

இந்த “லயன் 30வது ஆண்டு மலர்” 900 பக்கங்களுக்கு மேல் ஒன்பது வெவ்வேறான ரசனையுடன் கூடிய கதைகளுடன் அனைத்து தரப்பு காமிக்ஸ் ரசிகர்களையும் கவரும் வகையில் வெளிவந்து பிரமிக்கச் செய்கிறது!!


மொத்தத்தில் “The லயன் Magnum ஸ்பெஷல்”  -  தாறுமாறு!!
 


நண்பர் சவுந்தர் தனது வழக்கமான ஸ்டைலில் LMS பற்றிய சிறப்பு பதிவில் நம் கண்ணுக்கு விருந்தளித்துள்ளார். பின்வரும் முகவரியில் சென்று ரசியுங்கள்!
http://tamilcomics-soundarss.blogspot.in/2014/08/125-lion-magnum-special.html


ஓகே நண்பர்களே, இதோ என் அபிமான ஹீரோ டெக்ஸ் வில்லர் குழுவினர்களுடன் சமவெளிகளிலும், பாலைவனங்களிலும், செவ்விந்தியர்களுடனும் பயனிக்க ஆயத்தமாகிவிட்டேன்! Bye. 


12 comments:

  1. நண்பரே,

    தாங்கள் காமிக்ஸ் கதைகளை விரும்பிப் படிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இருந்தும் காமிக்ஸ் என்றால் டெக்ஸ் வில்லர் என்ற இன்றைய லயன் காமிக்ஸின் வணிகத்தை விட்டு வெளியே வாருங்கள்.

    ஜானி நீரோ, லாரன்ஸ்-டேவிட், காரிகன், ரிப் கெர்பி, சார்லி, கிஸ்கோ கிட், முகமூடி, மாயாவி போன்றவர்களின் கதைகளையும் படிப்பது உங்களின் காமிக்ஸ் வாசிப்பை இன்னும் பொலிவடையச் செய்யும் என்பது எனது தாழ்மையான எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே!

      //டெக்ஸ் வில்லர் என்ற இன்றைய லயன் காமிக்ஸின் வணிகத்தை விட்டு வெளியே வாருங்கள்.

      ஜானி நீரோ, லாரன்ஸ்-டேவிட், காரிகன், ரிப் கெர்பி, சார்லி, கிஸ்கோ கிட், முகமூடி, மாயாவி போன்றவர்களின் கதைகளையும் படிப்பது உங்களின் காமிக்ஸ் வாசிப்பை இன்னும் பொலிவடையச் செய்யும் என்பது எனது தாழ்மையான எண்ணம்.//

      டெக்ஸ் வில்லர் மட்டுமல்ல நண்பரே, நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள ஹீரோக்களின் கதைகளுக்கு பரம ரசிகன் நான். அதுமட்டுமல்ல நான் சிறு வயதிலிருந்தே காமிக்ஸ் ரசிகந்தான். என்னிடம் குறிப்பிட்டு சொல்லுமலவுக்கு காமிக்ஸ் கலெக்‌ஷனும் இருக்கிறது நண்பரே. அதில் நான் ஜானி நீரோ, லாரன்ஸ்-டேவிட், காரிகன், ரிப் கெர்பி, சார்லி, கிஸ்கோ கிட், முகமூடி, மாயாவி போன்றோர்களின் புத்தகங்களை அவ்வப்போது ஏக்கத்துடன் படிப்பதுண்டு. அதிலும் நான் ஒரு பேண்டம் ரசிகன். இந்தியில் நிறைய கதைகள் வாசித்திருக்கிறேன்.

      என்ன செய்வது இப்போது தமிழில் காமிக்ஸ் வெளியிடுவது பிரகாஷ் பப்ளிஷர் நிறுவனம் ஒன்றே என்பதை தாங்கள் அரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவர்கள் தாங்கள் குறிப்பிட்டுள்ள நாயகர்களை கை கழுவி மாமாங்கமாகிவிட்டது. இப்போதெல்லாம் லார்கோ விஞ்ச், வேய்ன் ஷெல்டன், டைலான் டாக் என்று காலத்துக்கு ஏற்றார்போல் மாறிவிட்டார்கள்.

      எடிட்டர் விஜயன் பிளாக்கில் ஜானி நீரோ, லாரன்ஸ், மாயாவி என்று பழைய கதைகளை மறுபதிப்பு கேட்டு வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன்தான் நண்பரே!

      Delete
  2. Ithai online'la order panna mudiyuma?


    James

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நண்பரே!

      http://lioncomics.worldmart.in/index.php?categoryID=36 இந்த ஆன்லைன் அட்ரஸ்க்கு சென்று வாங்கலாம். அல்லது எடிட்டர் விஜயனின் இந்த http://lion-muthucomics.blogspot.in/ சைட்டுக்கு சென்று பாருங்கள் முழு விபரமும் இருக்கிறது.

      நீங்கள் ஈரோடு பக்கம் என்றால் இப்போது ஈரோடு புத்தக திருவிழாவில் ஸ்டால் நெ.153 ல் நேரடியாக 10% டிஸ்கவுண்டில் வாங்கிக்கொள்ளலாம்.

      Delete
  3. good post,, with good pictures. enjoy the bok.

    ReplyDelete
  4. புதுவையில் இந்த புத்தகங்கள் கிடைக்குமா சார்?

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete