Saturday 22 December 2012

00001 - MARANATHIN NIRAM PACHAI

இனிய நண்பர்களுக்கு வணக்கம்,


    சில ஆண்டுகளாக அலுவலகத்திலும் சரி , வீட்டிலும் சரி, நேரம் கிடைக்கும்போது எல்லாம் நிறைய வலைபூக்களை நோட்டமிடுவதுண்டு. நான் ஒரு காமிக்ஸ் ரசிகன் என்பதால் குறிப்பாக தமிழ் காமிக்ஸ் சம்பந்தப்பட்ட ப்ளாக்களை ஆர்வமாக படிப்பேன்.    அதில் நண்பர்களின் எழுத்து நடைகளும், அவர்களின் ஆர்வமும்,  உழைப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்.  எடிட்டர் விஜயன் புதிதாக ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுத ஆரம்பித்ததும், comeback மூலம் லயன், முத்து காமிக்ஸ் சுறுசுறுப்பானதும், எனது ஆர்வம் அதிகமானதன் விளைவு இந்த வலைப்பூ. ஆனால் எதுவும் எழுதாமல் கிடப்பில் போட்டுவைத்தேன். நிற்க.

    நண்பர்களே இதோ எனது கன்னிமுயற்சி. எழுத்துப் பிழைகளுக்கு பொறுத்தருள வேண்டும்.   ஓகே, எழுதுவது என்று முடிவு செய்தாயிற்று, என்ன எழுதலாம் என யோசித்தபோது, எனக்கு சிறுவயதிலிருந்தே என் மனம் கவர்ந்த நாயகன் டெக்ஸ் வில்லர் கதைகளில் ஒன்றைப் பற்றிய என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது. 

"மரணத்தின் நிறம் பச்சை
(லயன் காமிக்ஸ் இதழ் எண் : 74)


எடிட்டரின் ஹாட் லைன்:


அட்டையின் உள்பக்கம்

கதைச்சுருக்கம் : 

         டெக்ஸ் தன்னுடைய நண்பர் கார்சனுடன் வழக்கம்போல் போகும் வழியில், ஓய்வுக்காக ஒரு கிராமத்தில் நுழைகின்றனர். அங்கே தனக்கு தெரிந்த பென் ரூபஸ் என்பவர், டாம் பிரெஸ்னோ  என்பவரின் சுரங்கத்தை குறைந்த விலையில் வாங்க பேரம் நடப்பதை பார்க்கிறார் டெக்ஸ். டாம் பிரஸ்னோ  குறைந்த விலையில் கொடுப்பதற்கான காரணத்தை சந்தேகத்துடன் விசாரிக்கிறார் டெக்ஸ். அதற்கு பிரஸ்னோ கூறும் காரணம் பயங்கரமாக இருக்கிறது. அதாவது, தன் நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து ஐநூறு டாலருக்கு, ஊரின் ஒதுக்குபுறமான ஒரு சுரங்கத்தை வாங்கி, 20 சுரங்க தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, சுரங்கத்தை தோண்டும்போது ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியால் தன் நண்பர்கள் உயிர் இழந்ததால், கிடைக்கும் விலைக்கு சுரங்கத்தை தள்ளிவிட நினைப்பதாக, திகிலான ஒரு பிளாஷ்பேக்குடன் சொல்லி முடிக்கிறான் பிரெஸ்னோ. 


     நம்ம டெக்ஸ் சும்மா இருப்பாரா, உடனே உண்மை என்ன என்று தெரிந்துகொள்ளவும், தன் நண்பர் பென் ரூபஸ் க்கு உதவவும் முடிவு செய்து களத்தில் இறங்கி, சுரங்கத்தில் என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே மீதிக்கதை.  அந்த மர்மமான வில்லன் யார் என்பதை பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பாகவும், திகிலாகவும், சஸ்பென்சாகவும் சொல்லியிருக்கிறார்கள்.  

இந்த விறுவிறுப்பான கதையின்  வில்லனை பயங்கரமாக சித்தரித்துவிட்டு, கடைசியில் அவன் முடிவை பொசுக்கென்று முடித்திருப்பதே மிகப்பெரிய குறையாக தெரியும்.  இறுதி பக்கங்களை பாருங்கள் புரியும்.  


இந்த இதழில் இடம்பெற்ற விளம்பரங்கள்: 


அவ்வளவுதான் நண்பர்களே. நான் மேலும் பதிவுகளை தொடரலாமா என்பது தங்களின் ஆதரவைப்பொறுத்தே. நன்றி.

இந்த கதையை படிக்க கொடுத்து உதவிய நண்பர் "முதலைப்பட்டாளம்" கலீல் அவர்களுக்கு நன்றி.  

Editor Vijayan Sir's Blog :
http://lion-muthucomics.blogspot.in/

பிரபல தமிழ் காமிக்ஸ் பதிவர்கள் நண்பர்களின் ப்ளாக் முகவரிகள் :
 http://www.tamilcomicsulagam.blogspot.in/
 http://mudhalaipattalam.blogspot.in/
 http://tamilcomics-soundarss.blogspot.in/
 http://www.bladepedia.com/
 http://www.kittz.info/
 http://johny-johnsimon.blogspot.in/
 http://browsecomics.blogspot.in/
 http://comicstamil.blogspot.in/
 http://modestynwillie.blogspot.in/
 http://muthufanblog.blogspot.in/
 http://tamilcomicskadanthapaathai.blogspot.in/
 http://www.comicology.in/
 http://kanuvukalinkathalan.blogspot.in/
 http://picturesanimated.blogspot.in/
http://www.comicsda.com/


வருகைதந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் மேலான கருத்துகளை இனிய தமிழில் தெரிவிக்க இங்கே கிளிக் செய்யவும். 

34 comments:

  1. முதல் பதிவிற்கும் உங்கள் ஆர்வத்திற்கும் என் வாழ்த்துக்கள்.

    அழகான பதிவு. தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.

      Delete
  2. //வாழ்த்துக்கள், முதல் துண்டு எனதே! :)// என்று FB-யில் போட்டு விட்டு இங்கு வந்து பார்த்தால், ஒரு துண்டுக்கடையே விரிக்கப்பட்டுள்ளது! பேசி வைத்து துண்டு போடுவீர்களோ?! :D

    படித்துவிட்டு வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நல்ல துவக்கம், தொடருங்கள்... தொடர்கிறோம்! :) (டெம்ப்ளேட் பின்னூட்டம் வரிசை எண்: 778)

      இதை எங்கேயோ பார்த்தாப்புல இருக்கே!!! ;)
      //வருகைதந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் மேலான கருத்துகளை இனிய தமிழில் தெரிவிக்க இங்கே கிளிக் செய்யவும். //

      Delete
    2. தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.

      Delete
    3. //தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.//
      முதல் பதிவு பின்னூட்டங்களுக்கே இப்படி பொறுப்பில்லாம டெம்ப்ளேட் பதில் போட்டா எப்புடி?! :)

      Delete
  3. என்னை லயன் முத்துவை கடைகளில் காசு கொடுத்து வாங்குவதை தொடங்கி வைத்த புத்தகம் இது... நண்பனின் கலெக்ஷனில் புதிய புத்தகம் இது என்று பளபளவென டாலடித்து கொண்டிருந்த புத்கதத்தை கண்டதும், இனி ராணி காமிக்ஸுடன் சேர்ந்து இதையும் எப்படியும் வாங்கனும் என்று கங்கணம் கட்டி கொண்டேன்..

    நான் தொலைத்த ஆதிகால கலெக்ஷனில் இதுவும் ஐக்கியம். கலீல் கொடுத்து வைத்தவர் :D

    ReplyDelete
    Replies
    1. தங்கள் நினைவுகளை தூண்டும் வகையில் என் முதல் பதிவு இருந்தது எனக்கு பெருமையே. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.

      Delete
  4. முதல் பதிவிலே கலக்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள் மென்மேலும் தொடர...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.

      Delete
  5. வாழ்த்துக்கள் நண்பரே. அடிக்கடி பதிவிடுங்கள் :D

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.

      Delete
  6. வாழ்த்துக்கள் நண்பரே காமிக்ஸ் காதலர்கள் வலை பூ ஆரம்பிப்பது ஒரு ஆரோக்கியமான விஷயம்.
    கண்டிப்பாக தொடருங்கள் உங்களது நினைவுகளையும் இதுபோல அறிய புத்தகங்களை பற்றியும்,

    எனது வலை பூ விற்கு லிங்க் கொடுத்ததற்கு நன்றி.
    சிறு வேண்டுகோள் அத்துடன் நம்ம ராஜுடைய

    http://www.comicsda.com/

    இணைக்க கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.

      நேற்றே இனைத்துவிட்டேன் நண்பா. மனதில் நினைத்து இருந்தேன். எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. ஞாபகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே. :)

      Delete
  7. கார்த்திகேயன்,
    டெக்ஸ் வில்லர் கதைகளிலேயே வித்யாசமான கதையாகிய மரணத்தின் நிறம் பச்சையுடன் அதிரடியாக பதிவினை துவக்கியுள்ளீர்கள்.

    இப்போதெல்லாம் பதிவின் கமெண்ட்டுகளில் வாழ்த்துக்கள் என்பதனையும் ஒரு டெம்பிளேட்டாக இடுவது வழக்கமாகி விட்டதால்..................................

    வாழ்த்துக்கள்.

    பதிவு மழை தொடர்ந்து பொழிய வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. "வாழ்த்துக்கள் என்பதனையும் ஒரு டெம்பிளேட்டாக இடுவது வழக்கமாகி விட்டதால்.................................." ஹி ஹி ஹி தலைவா வணக்கம்! உங்களை பதினொன்னு வரவேற்க காத்திருக்கிறேன்! சீக்கிரமா வந்துடுங்க!

      Delete
    2. தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே.

      Delete
  8. வருக வருக என இன்முகத்துடன் வரவேற்கிறேன்.(யப்பாடா வித்தியாசமா கமெண்ட் போட்டாச்சு)

    - லக்கி லிமட்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே.

      Delete
    2. கஷ்டப்பட்டு யோசிச்ச நம்ம லக்கி சாருக்காவது கொஞ்சம் வித்தியாசமா பதில் போட்டிருக்கலாமே?! :)

      Delete
  9. Hi,

    Let me Know your e-mail id. Kindly do send me a test mail to tamilcomicsulagam@gmail.com

    ReplyDelete
  10. நான் மொபில் மூலமாக போட்ட பின்நூட்டமேல்லாம் இங்கே காணப்படவே இல்லையே? சரி முக நூலில் போட்டுவிடுவோம்னு அங்கே பூ மாரி பொழிந்ததும் காணோம் எனக்கு என்ன ஆச்சு !??? நீங்களாவது சொல்லுங்க! இல்லை............ என் மொபைலில் நான் போட்ட பதிவை காணோமே! எப்படியோ நண்பா! எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அப்புறம் அதிரடியா நான் படிக்காத கதையில் துவங்கி விட்டீர்கள். நன்றிங்க! அடுத்த பதிவுக்கு காலம் கை கொடுக்கும்போதே வேகமாக பதிவிட்டு எங்களை மகிழ வைப்பீர்கள் என நம்புகிறேன்! என் வலைபூ லிங்க் இணைத்தமைக்கு மிக்க நன்றி நண்பா! கலாட்டாக்களால் நிரம்பி வழியட்டும் உங்கள் வலைப் பூ! விரைவில் சந்திப்போம்!

    ReplyDelete
  12. ராக்கெட் போல பதிவுகள் பறக்கணும் சரியா???

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே.
      தங்கள் ஆதரவுடன் மேலும் பதிவுகள்போட முயற்சி செய்கிறேன் நண்பரே.

      Delete
  13. பதிவும், படங்களும் சூப்பர் நண்பா.

    கதை உண்மையில் பொசுக்கென முடிந்தது போலவே இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கும், வருகைக்கும் நன்றி நண்பா.

      Delete
  14. Meendum ungal adutha padivai edirnokki...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா தொடருவேன் நண்பரே.
      ஏனோ தெரியவில்லை, உங்க கமெண்ட் மட்டும் spam ல இருந்தது.

      Delete
  15. டெக்ஸ் கதையில் extra terrestrial intelligence. மிக மிக வித்யாசமான டெக்ஸ் கதை இது. நல்ல தேர்வு. ஒரு புத்தகத்தை பற்றிய பதிவில் சற்று background info சேர்த்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் நண்பரே.

      Delete
  16. THIS HEAD LINE SUBJECT IS VERY INTERESTING
    AND DEDUCTIVE FOR SOME NATURE SEASONAL,S.

    ReplyDelete
  17. Where can i buy lion/uthu comics in madras

    ReplyDelete