Saturday, 11 January 2014

காமிக்ஸ் பொங்கல்!

தல-தளபதி என்று இந்த வருடப் பொங்கல் பட்டையை கிளப்பிகொண்டிருக்க, நமக்கும் அதற்கு ஈடாக காமிக்ஸ் ரிலிஸ் என்று சந்தோஷப் பொங்கலாகவே மாறிவிட்டது என்றால் மிகையில்லை! 2013 ல் 400 ரூபாய் NBS பிரமிப்பு என்றால், இந்தவருடம் நான்கு புத்தகங்களின் பிரமிப்பு! 

இதோ கை நிறைய காமிக்ஸ்! :)

  

இதில் நான் உடனே படித்தது “யுத்தம் உண்டு... எதிரி இல்லை...” புத்தகமே! இந்த இதழைபற்றிய எனது சிறு விமர்சனப் பதிவே இது!


எடிட்டரின் ‘ஹாட் லைன்’ பக்கங்கள்!


கதை!


 கமான்சே எனும் பெண்ணுக்கு சொந்தமான ஒரு நொடிந்துபோன பண்ணையில் வேலை (உதவி) செய்பவர்தான் கதையின் நாயகன் ரெட் டஸ்ட். இவருக்கு கீழே மூன்று சோப்ளாங்கி உதவியாளர்கள்! இவர்களுக்கு ’பல்கா’ ஆர்டர் ஒன்று கிடைக்கிறது! அதாவது, ரயில் பாதை அமைக்கும் பணியாளர்களுக்கு மாட்டிறைச்சி சப்ளை பன்னுவதே அந்த ஒப்பந்தம்! ஆர்டரை நிறைவேற்றும் சமயம், செயன்னீக்கள் (செவ்விந்தியர்கள்) வெள்ளையர்களுடன் தாங்கள் போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி, அவர்களுக்கு தரவேண்டிய உணவு வராததால், அதனால் கோபமுற்று, கமான்சேயின் பண்ணையை தாக்கி, அவர்களின் மாடுகளை கவர்ந்து சென்றுவிடுகிறார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தங்கள் மாடுகளை மீட்டுவரும் நோக்கத்தில் செயன்னீயர்களின் குடியிருப்புக்கு செல்கிறார்கள் ரெட்டும், கமான்சேவும். செயன்னீக்களின் உணவு பிரச்சனையை தீர்ப்பதாக, ரெட் அவர்களிடம் மூன்று நாட்கள் அவகாசம் கேட்கிறார். நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கமான்சேவை பினையாக வைத்துக்கொண்டு அதற்கு சம்மதிக்கிறார்கள்.

மூன்று தினங்களில் ரெட் பிரச்சனையை தீர்க்கிறாரா? செயன்னீக்களிடம் கைதியாக இருக்கும் காமான்சேவின் நிலை என்னானது?  உணவுக்காக காத்திருக்கும் ரயில் பணியாளர்களின் முடிவு என்ன? என்பதை மீதி வண்ணப்பக்கங்களில் கண்டு, படித்து மகிழுங்கள்! 

 

 

நிறைகள்!

 • 60 பக்கங்கள் கொண்ட இந்த இதழின் அட்டைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! 
 • கையில் பிடித்து படிப்பதற்க்கு வசதியாகவும் இருக்கிறது! 
 • அனைவரையும் கவரும் அட்டகாசமான, தெளிவான ஆர்ட்வொர்க்!
 • இக்கதையுடன் பக்க நிரப்பியாக வந்துள்ள லக்கி லுக்கின் சிறுகதை  ”ஒரு இரயில் பயணம்” உண்மையிலேயே சூப்பர்! 

குறைகள்!

 • கதை-எந்த அதிரடி திருப்பமும் இல்லாமல், ஏதோ டாகுமெண்டரி போல் தோன்றுவது எனக்கு மட்டும்தானா?!
 • சவசவ என முடியும் கதையின் கிளைமாக்ஸ்!
 • உள் பக்கங்களில் சில பக்கங்கள் பளிச்சென்றும், அதே சமயம் சில பக்கங்கள்  டல்லாகவும் இருக்கிறது!
 • புத்தகம் 60 பக்கங்கள் மட்டுமே என்பதால், முப்பது நிமிடங்களில் படிப்பதற்கு போதுமானதாக தோன்றுவது ஒரு பெரிய குறையாகத் தெரிகிறது!

காமிக்ஸ் மினி டாட் காம்!

1.  கடந்த ஆண்டு நண்பர்களுடன் புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தது ஒரு இனிய அனுபவமாக இருந்தது! ஆனால், இந்த முறை கலந்துகொள்ள முடியாமல் போனது வருத்தமே! அந்த குறையை நண்பர் விஷ்வா அவர்களின் புத்தக கண்காட்சி அப்டேட் பதிவுகள் தீர்த்துவைப்பது சந்தோஷமாக உள்ளது!


2.   நண்பர் ‘முதலைப்பட்டாளம்’ கலீல் அவர்கள் தொடர்ந்து பதிவுகள் இட்டு வருவது மிகவும் சந்தோஷத்தை தருகிறது! இதோ அவரின் பொங்கல் புத்தகங்களின் பதிவு ஒன்று!3.    அதிரடி பதிவர் நண்பர் ஜானி அவர்கள் புத்தாண்டு பரிசாக ராணி காமிக்ஸில் வெளிவந்த ஒரு கதையை முழுவதும் அழகாக ஸ்கேன் செய்து போட்டுள்ளார்! அவருக்கு என் நன்றி!

http://johny-johnsimon.blogspot.in/2014/01/blog-post.html

4.   நண்பர் பரனிதரன் அவர்களின் இந்த மாத இதழ்களின் அழகான விமர்சணப் பதிவு!

http://baraniwithcomics.blogspot.in/2014/01/blog-post.html


வருகை தந்த அனைவருக்கும் நன்றி நண்பர்களே!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


23 comments:

 1. சூப்பர் ஸார்...போன வருடம் புத்தக் திருவிழாவில் நீங்கள் கலந்து கொண்ட புகைப்படங்களை பார்த்தேன்...இந்த வருடம் நீங்களும் புகைப்படத்தில்தான் பார்க்க முடியுமோ...போய் வருவதற்கு ஏதாவது வாய்ப்புண்டா...உங்கள் விமர்சனம் அருமை... இதே போல் வரும் வாரமும் புத்தக கண்காட்சியில் நமது காமிக்ஸ் நண்பர்கள் தொடர்பான புகைப்படங்கள் கிடைத்தாலும் இங்கே பதிவிடுங்கள்...உங்கள் புதிய பதிவிற்கு நன்றி...:)

  ReplyDelete
  Replies
  1. நன்றி வேல் சார்,
   இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இல்லை!
   //நமது காமிக்ஸ் நண்பர்கள் தொடர்பான புகைப்படங்கள் கிடைத்தாலும் இங்கே பதிவிடுங்கள்//
   கண்டிப்பாக நண்பரே! :)

   Delete
 2. 30 நிமிடங்களில் ஒரு புத்தகத்தைப் படிக்கிறீர்களா? ஊப்ப்... என்னா ஒரு வேகம்!! :)

  ReplyDelete
  Replies
  1. மொத்தம் 60 நிமிடங்களில், 30 நிமிடங்கள் 42 பக்க கதையை படிக்க! 15 நிமிடங்கள் ஹாட் லைன் மற்றும் சிறுகதை படிக்க, மீதி 15 நிமிடங்கள் பிற விஷயங்களுக்காக! இப்போ கூட்டி கழித்துப் பாருங்களேன் கணக்கு சரியா வரும்! :P

   Delete
 3. Replies
  1. நன்றி செந்தில்! தங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

   Delete
 4. மின்னல் வேக விமர்சனம். தொடர்ந்து கலக்குங்க.

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதம்தான் காரணம்! :P

   Delete
 5. //கதை-எந்த அதிரடி திருப்பமும் இல்லாமல், ஏதோ டாகுமெண்டரி போல் தோன்றுவது எனக்கு மட்டும்தானா?!//
  எனக்கும் தான் ஜி! கௌபாய் மோகத்தால் முதலில் இந்தக் கதையைத் தான் படித்தேன்! முதல் பாதி ஓகே, இரண்டாம் பாதி சவ சவ! :)

  இதே பாணியில் மற்ற கதைகளுக்கும் மின்னல் விமர்சனம் போட்டு தூள் கிளப்புங்கள் கா.கே! இந்த வாரம் கரண்டி மேன் வாரம்! :)

  //புத்தகம் 60 பக்கங்கள் மட்டுமே என்பதால், முப்பது நிமிடங்களில் படிப்பதற்கு போதுமானதாக தோன்றுவது ஒரு பெரிய குறையாகத் தெரிகிறது!//
  இதெல்லாம் ஒரு குறையா?! தலைகீழா நின்னு படிங்க ஜி! ரொம்ப நேரம் படிக்கலாம்! ;) நான் அப்படித் தான் படிக்கறேனான்னு குதர்க்கக் கேள்வி கேட்கப் படாது! :D

  ReplyDelete
  Replies
  1. //முதல் பாதி ஓகே, இரண்டாம் பாதி சவ சவ!//
   ஆமாம் ஜி!

   //இந்த வாரம் கரண்டி மேன் வாரம்!//
   ஏன் இந்த கொலவெறி!

   Delete
 6. thanks nanabare! pongal oru settu parcel marakkaamal anupidunga!!!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு இல்லாமலா? அனுப்பிட்டா போச்சு நண்பரே! :)

   Delete
 7. அருமை நண்பரே ...மீதி உள்ள மூன்று கதைகளும் பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் ..

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே! முயற்சி செய்கிறேன்!

   Delete
 8. மின்னல் வீரன் கார்த்திகேயன் வாழ்க :D

  ReplyDelete
 9. நானும் காமிக்ஸ் ரசிகன்தான். இப்போதும் கைநிறைய காமிக்ஸ் கிடைப்பது பற்றியும் அவற்றின் குறை நிறையைப் பற்றியும் எழுதி இருந்தீர்கள். சின்ன வயதில் ஆர்வத்துடன் படித்த அதே காமிக்ஸ் கதைகள , இப்போது பெரியவரான பிறகு படிக்கும்போது சலிப்பூட்டவே செய்யும். தங்கள் பதிவிற்கு நன்றி!

  அந்தக் கால வேதாளம் ( FANTOM ) மற்றும் மந்திரவாதி மண்ட்ரக் காமிக்ஸ் கதைகள் இப்போதும் (தமிழில்) வெளி வருகின்றனவா என்று தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி இளங்கோ சார்!

   //சின்ன வயதில் ஆர்வத்துடன் படித்த அதே காமிக்ஸ் கதைகள , இப்போது பெரியவரான பிறகு படிக்கும்போது சலிப்பூட்டவே செய்யும்//

   உங்களின் இந்த கருத்தில் நான் மாறுபடுகிறேன்! தற்போது வெளிவரும் காமிக்ஸ் இதழ்களை ஒரு முறை படித்துப்பாருங்களேன் சார்! கண்டிப்பாக தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வீர்கள்!

   Delete
 10. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete