Tuesday, 29 January 2013

005 பார்த்தது ! கேட்டது ! படித்தது !

என்னடா பொழப்பு இது, யாராருக்கோ பதில் சொல்ல வேண்டியிருக்கு. வர வர எட்டு, ஒன்பது மணிநேரம் ஆபீஸ்ல ஓடறதே பெரும்பாடா இருக்கே. கருமம் எந்தநேரத்தில பொறந்துதொலச்சமோ - இப்படிதான் சமிபகாலமாக அடிக்கடி மனதில் ஒரு வெறுப்பாக தோன்றுகிறது. சரி ஏதாவது பிஸினெஸ் பண்ணலாம் என்று யோசித்தால் பேங்க் கடன்கள் தொலச்சுபுடுவேன் என்று பயமுறுத்துகிறது. இப்படிதான் அலுவலகத்தில் ஒருநாள் யோசித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் பழைய நண்பர் ஒருவர் நீண்டநாள் கழித்து என்னை பார்க்கவந்தார். "என்னங்க வேலையெல்லாம் எப்படி போகுது "    என்று ஒரேஒரு கேள்விதான் கேட்டேன். "அட நீங்க வேற, ஏண்டா பொறந்தோம்னு இருக்கு. ஆபீஸ்ல கண்ட கண்ட நாய்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியிருக்கு. காரியம் முடியிறவரைக்கும் மேனேஜ்மென்ட் இனிக்க இனிக்க பேசறாங்க. வேலை முடிஞ்சவிடனே அவங்க சுயரூபத்தை காமிக்கிறாங்க. யாருக்கும் நன்றி என்பதே கிடையாதுங்க. கூட வேல பாக்கும் ஊழியரே முன்னாடி சிரிச்சி பேசிட்டு, பின்னாடிபோய் போட்டுகொடுக்கிறாங்க. யாரை நம்புவதென்றே தெரியிலைங்க.  இந்த ஐ டி கம்பனில வேலை பார்கிரவங்களை பாருங்க. ஜாலியா எந்த தொல்லையுமில்லாம வேலைசெய்யறாங்க. நான் பொறந்த நேரம் இப்படி ஒரு கம்பனில வேலை செய்யனும்னு தலையில எழுதியிருக்கு". என்று பொரிந்து தள்ளிவிட்டார். 

"அட என்னடா தொல்ல, கொடும கொடுமன்னு கோவிலுக்குப்போனா அங்கொரு கொடும அவுத்து போட்டு ஆடுதே " என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். அப்போது ஒரு பையன் வேலைகேட்டு உள்ளே வந்தான். அவன் பயோ டேட்டா வாங்கிப்பார்த்தேன். BE மெக்கானிகல், 65% மார்க். "எந்தவேலையா இருந்தாலும் கொடுங்க சார் செய்யறேன். மெஷின் ஆபரேட்டராகூட வேலைசெய்ய ரெடி சார். சம்பளம் கம்மியா இருந்தாகூட பரவாயில்ல சார்" என்றான் பரிதாபமாக. சரிப்பா எங்க GM கேட்டுட்டு கால் பண்றேன், என்று சொல்லியனுப்பினேன். அவன் போனபிறகு நானும் நண்பரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம் அமைதியாக. பிறகு நண்பரை என் பைக் இல் அழைத்துசென்று பஸ் ஏற்றிவிட்டு வீட்டுக்கு சென்றேன். உள்ளே நுழையும்போதே ஏதோ ஒரு லோக்கல் டிவியில், யாரோ ஒரு பெரியவர், 'கிடைத்ததை வைத்து சந்தோஷமாக வாழ்வதெப்படி' என்று திருக்குறள் எல்லாம் மேற்கோள் காட்டி ரொம்ப சீரிசாக பேசிக்கொண்டிருந்தார். 

***********************************************************************************

உலகில் மனிதன் தோன்றிய நாள்முதல் ஆணாதிக்கமும், பாலியல் தொல்லைகளும் தோன்றியிருக்கிறது. ஆனால் இந்த நாகரிக உலகில், அதுவும் சமீப காலங்களில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக சொல்கிறார்கள். ஓகே செய்தி இதுவல்ல. ஏழாம் வகுப்பு மாணவிக்கு ஒரு ஆசிரியர் லவ் லெட்டெர் எழுதிய செய்தியை தினசரியில் படிக்க நேர்ந்தது. நாகை மாவட்டம் ஒரு பள்ளியில் ஒரு மாணவிக்கு 'NAAN UNNAI KAATHALIKKIREN' என்று 'ஆங்கிலத்தில்' எழுதி கொடுத்திருக்கிறார். அந்த புள்ளைக்கு ஒன்னும்புரியாம, அந்த லெட்டரை வகுப்பு ஆசிரியரிடம் காண்பிக்க, அவங்க தலைமை ஆசிரியரிடம் காண்பிக்க, இப்போ லெட்டர் எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட் ஆர்டரோடு வீட்ல அவமானத்தோடு இருக்கிறார். இந்த செய்தியில் நிறைய சந்தேகங்கள் வந்தாலும், அந்த வாத்தியாருக்கு இதெல்லாம் தேவையா என்று பரிதாபப்படத்தோனுகிறது.

***********************************************************************************

 விஸ்வரூபம் - ஒருவாரமாக செய்திதாள்களிலும், சேனல்களிலும் பரபரப்பான செய்தியாக தீனிபோட்டுக்கொண்டிருக்கிறது. விவாதம் செய்கிறோம் என்றபேரில் செய்திச் சேனல்கள் 8 மணி நேரங்களை ஓட்டிக்கொண்டிருக்கின்றன. நம்ம படம் வசூலில் கலக்குதோ இல்லையோ, இப்படி பரபரப்பாக செய்திகளில் அடிபடும் - என்று கமலே எதிர்பார்த்திருக்கமாட்டார்.  படத்தை ஒழுங்காக ரிலீஸ் பன்னவிட்டுயிருந்தால் இருபது நாட்களுக்குள் பெட்டிக்குள் முடங்கியிருக்கும் என்று படம் பார்த்த நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.  பிரச்னை எங்கேயோ ஆரம்பித்து, இப்போது எங்கேயோ போய்கொண்டிருக்கிறது. ஜெயா அரசு 144 தடையுத்தரவு போடுமளவுக்கெல்லாம் போனது ரொம்ப ஓவராக தெரிகிறது. விஸ்வரூபம் இப்போது தமிழ்நாடு அரசுக்கு பிரஸ்டிஜ் பிராபலத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அரசு தடை உத்தரவு பிறப்பித்த உடனே, கமல் முதல்வரை சந்தித்து பேசியிருந்தால் ஒருவேளை பிரச்னை சுமூகமாக முடிந்திருக்கலாம். இப்போதே படத்தின் DVD கள் கிடைப்பதாக கூறுகிறார்கள். ம்ம்ம் வெரன்னசொல்ல, கமலுக்கு நேரம் சரியில்லை.  பிரச்னை பொதுமக்களுக்கு இடையூறாக திரும்பாமல் இருந்தால் சரி.

***********************************************************************************

13 comments:

  1. Replies
    1. ஒன்னுமில்லையே ! ஏன்? என்னாச்சு? :)

      Delete
  2. // இந்த ஐ டி கம்பனில வேலை பார்கிரவங்களை பாருங்க. ஜாலியா எந்த தொல்லையுமில்லாம வேலைசெய்யறாங்க. //

    இது கனவுலே கூட நினைத்துப் பார்க்க முடியாத நிகழ்வு. எந்த IT கம்பெனியில் ஜாலியாக இருக்க விடுறாங்கே

    ReplyDelete
    Replies
    1. இதனை நானும் ஆமோதிக்கிறேன்.
      இந்த பதிவில் இருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்.

      Delete
    2. இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், IT கம்பெனியில் வேலைபார்ப்போர் அனைவரும் நல்லவர்கள், வல்லவர்கள் மற்றும் காலம் நேரம் பார்க்காமல் உயிரை கொடுத்து வேலைபார்ப்பவர்கள். உதாரண ஊழியர்கள் Karthik Somalinga, Periyar Poornish Kumar, Krishna Raja Kumaran V V மற்றும் Lucky Limat - அப்பாடா தப்பிச்சாச்சு. :)

      சாட்சி நண்பர் ஜான் சைமன். :)

      Delete
    3. இனனும் தப்பிக்கல. நானும் IT தான் வொர்க் பண்ணுகிறேன்.

      வார நாட்களில் 3 மணி நேரம் பயணத்திலும் 9.5 மணி நேரம் ஆபீசிலும் போக (கூட வேலை இருந்தால் சிவ ராத்திரி தான்) இப்பிடி வேலை பார்த்து கொண்டிருக்கும் எங்களைப் பற்றி தவறான தகவல் வெளியிட்ட காமிக்கேயனை வன்மையாக கண்டிக்கிறோம்.

      Delete
  3. ha ha appo naan mattum thaan free a errukenaa!!

    ReplyDelete
    Replies
    1. உங்க blog பார்த்தேன் நண்பரே. உண்மையிலேயே சூப்பர் பதிவு ! தொடருங்கள்.

      Delete
  4. //படத்தை ஒழுங்காக ரிலீஸ் பன்னவிட்டுயிருந்தால் இருபது நாட்களுக்குள் பெட்டிக்குள் முடங்கியிருக்கும் என்று படம் பார்த்த நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். //
    //முதல்வரை சந்தித்து பேசியிருந்தால் ஒருவேளை பிரச்னை சுமூகமாக முடிந்திருக்கலாம்.//

    ஆமா நீங்க யார் கட்சி ? :)

    ReplyDelete
  5. பார்த்தது, கேட்டது, படித்தது- கான்செப்டை நல்லா உபயோகப்படுத்தியிருக்கீங்க, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. இன்று ஒரு தகவல் மாதிரி பல தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டு விட்டீர்கள். நீர் ஒரு தகவல் களஞ்சியமய்யா..

    ReplyDelete