Tuesday, 8 October 2013

குளுக்கோஸ் பட்டாளம் !

இந்த மாதமும் இரண்டு புத்தகங்கள். ரூபாய் 100 விலையில் ரத்தப்படலம் மற்றும் ரூபாய் 50 விலையில் ஆகாயத்தில் அட்டகாசம். ஒன்று சீரியஸ் ரகம் என்றால் மற்றொன்று காமடி பட்டாளம். இப்போதெல்லாம் இந்த ட்ரண்ட் நன்றாகவே இருக்கிறது. நான் முதலில் படித்தது “ஆகாயத்தில் அட்டகாசம்” கதையையே.

அட்டைப்படங்கள் குறைசொல்லமுடியாத அளவில் நன்றாகவே உள்ளது.

 காமிக்ஸ் டாட் காம் !
உள்நாட்டு போர் என்றால் கதைக்களங்கள் மிகவும் சீரியசாகத்தானே இருக்கவேண்டும்! ஆனால் இங்கே சூழ்நிலைகள் அப்படியே தலைகீழ். கேலிக்கூத்தாக்கி படிப்பவர்களை சிரிக்கவைத்திருக்கிறார்கள். வடக்கத்திய ராணுவப்பிரிவின் குதிரைப்படையின் சார்ஜெண்ட் ரூபி மற்றும் கார்பொரல் ஸ்கூபி இவர்கள்தான் இந்த கதையின் நாயகர்கள். மேலும் இக்கதையில் வரும் அனைத்து பாத்திரங்களுமே கோமாளிகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். அதிலும் அந்த கேப்டன் ஸ்டார்க், கர்னல் இவர்கள் அடிக்கும் லூட்டி வயிரை பதம் பார்ப்பவர்கள். இவர்கள் மட்டுமல்ல, அனைத்து கேரக்டர்களுமே நம்மை சிரிக்கவைக்கிறார்கள். அட்டகாசமான ஆர்ட்வொர்க், காமடிக்கு நூறு சதவிதம் கேரண்டி சொல்லவைக்கும் மொழிபெயர்ப்பு என்று இந்த இதழ் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. இதுவரை வெளியான ஐம்பது ரூபாய் புத்தகங்கள் சோடைபோனதில்லை. அந்த வரிசையில் “ஆகாயத்தில் அட்டகாசம்” முதல் இடத்தை பிடித்திருக்கிறது!

ஒல்லிபிச்சான் லக்கி லூக் ஒன்மேன் ஆர்மி. அதனால் இவருக்கு பிரச்சனை இல்லை. ஆனால் சிக்பில் & கோ விற்குதான் இந்த நீலச்சட்டை நாயகர்கள் பலத்த போட்டியை கொடுப்பார்கள் எனத்தோன்றுகிறது! 

மொத்தத்தில் இந்த ப்ளுகோட் பட்டாளம் தமிழ் காமிக்ஸ்க்கு கிடைத்த குளுக்கோஸ் பாட்டில்!

லக்கி லூக் தோன்றும் நான்கு பக்க சிறுகதை ஒரு போனஸ்!

ஆவலைத்தூண்டும் 2014 !

காமிக்ஸ் மினி ! 1.  கடந்த ஞாயிறு காலை ஒரு நிச்சயதார்த்த விழாவிற்கு திருக்கோவிலூர் செல்ல பரபரப்பாக கிளம்பிக்கொண்டிருந்தேன். விடுமுறைதினம் என்பதால் அன்றைய நாளிதழ் தாமதமாகத்தான் வரும். அதேபோல் அன்று வந்த “தி இந்து”  நாளிதழை கிளம்பும் சமயத்தில் அவசர அவசரமாக புரட்டினேன். என்ன ஒரு இன்ப அதிர்ச்சி! 11 ம் பக்கத்தில் நூல் வெளி பகுதியில் நமது காமிக்ஸ் அறிமுகம். சந்தோஷத்தில் முகநூலில் நன்பர்களுக்கு பதிவேற்றிவிட்டுதான் கிளம்பினேன். இதற்கு யார் உறுதுணையாக இருந்திருந்தாலும் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன்.

இதோ உங்கள் பார்வைக்கு.
2.  சூப்பர் பாஸ்ட் பதிவர் நன்பர் சவுந்தர் அவர்களின் இந்த மாத மற்றொரு இதழான “ரத்தப்படலம்” பதிவுக்கு இங்கே செல்லுங்கள்!
http://tamilcomics-soundarss.blogspot.in/2013/10/106-xiii-ratha-padalam-lion-new-release.html

3.   காமிக்ஸ் வட்டார ஜாம்பாவான்கள் சமிபத்தில் சந்தித்துக்கொண்ட இருட்டுக்கடை அல்வாவும் ஒரு திடீர் சந்திப்பும் - படித்து இன்புருங்கள்!
http://www.bladepedia.com/2013/10/Rajapalayam-Travelogue-2013.html

4.  சமிபத்தில் ஆங்கில நாளிதழான “Deccan Chronicle"  ல் வந்த ஒரு ஆர்ட்டிகல் அனைவரும் அறிந்ததே. நன்பர் விஷ்வா தனது வலைப்பூவில் பதிவேற்றியுள்ளார்.  

5. நன்பர் ராஜ் முத்துகுமார் அவர்களின் தனது பானியில், கடந்த மாத இதழ்களின் விமர்சணங்கள்! 
http://www.comicsda.com/2013/09/vs-makiling-fortress-hour-of-tiger.html

அவ்வளவுதான் நன்பர்களே. வருகைதந்த அனைவருக்கும் நன்றி. விரைவில் சந்திப்போம்!


11 comments:

 1. கரண்டி மேன் ரிட்டர்ன்ஸ்!!! போன வருஷம் மாதிரி இயர் எண்டு பதிவு மட்டும்தான் போடுவீங்க போலன்னு நெனச்சுட்டு இருந்தேன்! மறுபடியும் தொபுக்கடீர்னு களம் இறங்கிட்டீங்க!! :) பதிவை அணு அணுவாக ரசித்து விட்டு, என் எண்ணங்களை மீண்டும் பகிர்கிறேன்!! (பதிவை இன்னும் படிக்கக் கூட இல்லைங்கறதை எப்படி எல்லாம் ரீஜண்டா சொல்ல வேண்டி இருக்கு!) :P

  ReplyDelete
 2. வந்துட்டார்யா வந்துட்டார்யா. ரொம்ப நாள் கழித்து ஒரு பதிவிட்டு இருக்கிறீர்கள் என்றால், ப்ளூ கோட் கனவான்கள் உங்களை கவர்ந்து விட்டார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. உண்மையில் சிக் பில் & கோ விற்கு நல்ல போட்டி கொடுப்பார்கள் என்று சொல்லலாம்.

  எனக்கும் ரொம்ப பிடித்திருக்கிறது. தி இந்து இதழிற்கு அனுப்பிய வே.சந்திர சேகருக்கு நன்றிகள் பல. தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 3. 'நச்' பதிவு! :)

  ReplyDelete
 4. @ King Viswa
  நன்றி விஷ்வா. சார் எல்லாம் வேண்டாமே! :)

  @ Karthik Somalinga
  இன்னுமா பதிவை படிச்சுட்டு இருக்கீங்க! ஐ அம் வெய்ட்டிங்! ;)

  @Raj Muthu Kumar S
  //தி இந்து இதழிற்கு அனுப்பிய வே.சந்திர சேகருக்கு நன்றிகள் பல//
  புத்தகத்தை பற்றி சுருக்கமாக அதேசமயம் அழகாகவும் விமர்சித்து இருக்கிறார்!

  @ Erode VIJAY
  முதல்முறையாக இந்த தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி விஜய். அடிக்கடி வாங்க! :)

  @ திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்
  @ கிருஷ்ணா வ வெ
  @ ப்ரூனோ ப்ரேசில்
  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நன்பர்களே!

  ReplyDelete
 5. //இன்னுமா பதிவை படிச்சுட்டு இருக்கீங்க! ஐ அம் வெய்ட்டிங்! ;)//
  பின்னே, அணு அணுவா ரசிக்கறதுன்னா சும்மாவா?! இப்பதான் முதல் பத்தி ஓடிட்டு இருக்கு! :P

  //@ Erode VIJAY முதல்முறையாக இந்த தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி விஜய். அடிக்கடி வாங்க! :)//
  நீங்க பதிவே போடாம, வாங்க வாங்கன்னு கூப்பிட்டா எப்புடி? ;) அடிக்கடி பதிவு போடுங்க, விஜய் தன்னால வருவாரு!! :D

  ReplyDelete

 6. //மொத்தத்தில் இந்த ப்ளுகோட் பட்டாளம் தமிழ் காமிக்ஸ்க்கு கிடைத்த குளுக்கோஸ் பாட்டில்!// Kalakkureenga Ponga :-)

  Nice Review. Nice Post. Sorry for the delay :)

  ReplyDelete