Friday, 11 October 2013

எங்கே செல்லும் இந்த இரத்தப் பாதை !

மேஃப்ளவர் !

இந்த வார்த்தை உங்களுக்கு எதை ஞாபகப்படுத்துகிறது? அமெரிக்கா வரலாறு கொஞ்சம் சொல்லுங்க தெரிஞ்சிப்போம், என்று கேட்டால் உடனே கொலம்பஸிலிருந்து ஆரம்பிப்பார்கள். அது 1600 க்கு முந்தைய வரலாறாக இருக்கும். ஆனால் 1600 களுக்கு பிறகு ஐரோப்பியர்களின் குடியேற்றங்களுக்குப்பின்  அமெரிக்காவில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தது. 1620 -ல் ஐரோப்பியர்களை முதன்முதலில் அப்பகுதிக்கு சுமந்து சென்ற கப்பலின் பெயரே இந்த “மேஃப்ளவர்”. இந்த குடியேறிகளின் நோக்கம் “தங்கம்” என்பதே முக்கியமான காரணியாக  இருந்திருக்கிறது. இதற்காக அவர்கள் அனுபவித்த வேதனைகளும், கொடுத்த விலைகளும் ஏராளம். இன்று அமெரிக்கா உலகநாடுகளின் பெரியண்ணன் எனப்போற்றப்படுவதற்கும், பல வரலாற்று நிகழ்வுகளுக்கும், அந்நாட்டின் அபரிமிதமான வளர்ச்சிக்கும் பிள்ளையார் சுழி போட்டவர்கள் இந்த குடியேறிகளே எனலாம்!

அதுசரி, இப்போ எதுக்கு இந்த வரலாறு என்று நீங்கள் முனுமுனுப்பது புரிகிறது.  வேறொன்றும் இல்லை, இந்த மாதம் லயன் காமிக்ஸ் வெளியீடான “இரத்தப்படலம்” தொடரில் “மேஃப்ளவர்” வலிய அதேசமயம் சுவராஸ்யமாக திணிக்கப்பட்டிருக்கிறது! அமெரிக்க வரலாற்றை மிஞ்சிவிடும்போல் உள்ளது நமது கதாநாயகன் மக்லேன் வரலாறு! கதாசிரியர்கள் அவரையும் நம்மையும் நிம்மதியாக விடப்போவதில்லை என்று தெளிவாகிறது. பல ஆண்டுகளாக தன்னைத்தானே தேடியலையும் நம்பர் XIII, இதிலும் அதே வேலையை தொடர்கிறார். வான்ஹமே விட்டுச்சென்ற மிகப்பெரிய பணியை, பிரபல தோர்கல் புகழ்  யிவெஸ் செண்டே, ஓவியர் இயெனரி ஜிகுநௌ ஜோடி இந்த புதுத்தொடருக்கு பொறுப்பேற்றுள்ளனர். இவர்களின் அபார உழைப்பு பக்கத்துக்கு பக்கம் பிரமிக்கச் செய்கிறது.XIII ன் உயிர்பலி ராசி !
 


கதையின் நாயகன் மக்லேனுக்கு ஒரு ராசி உண்டு. அவர் உதவிநாடிச் சென்றாலோ அல்லது அவருக்கு யாராவது உதவி செய்ய முற்பட்டாலோ பெரும்பாலும் அடுத்த சில பக்கங்களில் அவர்களின் கதை முடிந்துவிடும். அதே ராசி இதிலும் தொடரவே செய்கிறது. ஃபேஸ்புக் உதவியுடன், தன் சிறு வயது நண்பன் ஜிம் ட்ரேக்கை தேடிச்செல்லும்போதே நமக்கு தெரிந்துவிடுகிறது, இக்கதையின் முதல் பலியாடு ஜிம் ட்ரேக்தான் என்று. அவரை போட்டுத்தள்ளுவது   யூலியானா எனும் அழகான ஃபிகர். இவள் USAFE என்ற தனியார் நிறுவனத்தின் ஒரு அங்கம். இந்த அமைப்புதான் மக்லேனை கதை முழுவதும் ஓடவைக்கிறது. இனிவரப்போகும் கால் நூற்றாண்டு?! தொடருக்கும் இவர்கள்தான் மக்லேனை  அலையவிடப் போகிறவர்கள் என்பது நமக்கும் தெளிவாகிறது!


அடுத்து தொடரும் மறுபாதியில் இந்த USAFE குழுவின் சதிவலையால், காந்தவிழியாள் ஜோன்ஸ், தாலிபான் தீவிரவாதிகளின் உதவியுடன் ஒரு வித்தியாசமான பிரதேசத்தில் பிணையக்கைதியாக்குகிறார்கள். இதன் மூலம் மக்லேனை பணியவைப்பது USAFE குழுவின் நோக்கமாகும். XIII தனது நண்பர் ஜெனரல் காரிங்டன் உதவியுடன்  மேஜர் ஜோன்ஸை   எப்படி மீட்கிறார் என்பது மீதி பக்கங்களில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று ஆக்‌ஷன் மற்றும் பல உயிர்பலிகளின் நடுவே பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள். இதற்கு நடுவே பெட்டி எனும் அழகு தேவதை மூலம் மேலே சொல்லப்பட்ட மேஃப்ளவர் கப்பலின் வரலாறும் வருகிறது! இந்த கப்பலுக்கும் நம்பர் XIII க்கும் என்ன தொடர்பு என்று புத்தகத்தை படித்து தெரிந்துகொள்ளுங்கள்!


தமிழில் புதிதாக வந்திருக்கும் இந்த கதைத்தொடரில் என்னை மிகவும் கவர்ந்தது கதையை விட, சித்திரங்களும் அதற்கான வண்ணக்கலவைகளுமே. நுனுக்கமான பல விஷயங்களை அப்படியே நம் கண் முன்னே தத்ரூபமாக நிறுத்தி நம்மை மெய்மறக்கச்செய்திருக்கிறார்கள். அதனாலேயே கதையின் பல குறைகளும் அமிழ்ந்துபோகச்செய்கிறது!

என்னைப்போன்றவர்கள் இதன் ஒரிஜினல் ஆல்பங்களை படிக்காமல், முதல்முறையாக தமிழில் படிக்கும்போது இத்தொடர் மிகப்பெரிய வரவேற்பைப்பெறும் என்பதில் ஐயமில்லை!  

காமிக்ஸ் மினி டாட் காம் !

1.  இரத்தப்படலம் புத்தகத்தின் அட்டைபடம் வழக்கம்போல் சர்ச்சைகளை கிளப்பிவிட தவறவில்லை!

ஒரிஜினல்

அட்டைகள் பளிச்சென்று இருக்கவேண்டும் என்று எடிட்டரும், பல வாசகர்களும் விரும்புவது உண்மைதான். அட்டைகளில் சில டிங்கரிங் வேலைகள் செய்வதில் தவறில்லைதான் - ஒரிஜினல் அட்டைப்படங்கள் எடுபடாதபோது மட்டும். ஆனால், இந்த இதழைப் பொறுத்தவரை கீழே தீட்டப்பட்டுள்ள இரத்தக்கறை பார்டர் மட்டுமே கண்ணை உறுத்துவதுபோல் உள்ளது என்பது என் கருத்து! சில சர்ச்சைகள் தொடரவேண்டுமென்று எடிட்டர் விஜயன் விரும்பியே இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்படுகிறதோ?! :D

2.   இந்த மாத இதழ்கள் மட்டுமல்ல, மேலும் பல லயன் நிறுவன வெளியீடுகள் eBay ல் விற்பனையாகிகொண்டிருக்கிறது! இதோ அதற்கான ஆன்லைன் முகவரி..
http://www.ebay.in/sch/thecomicsstores2012/m.html?_nkw=&_armrs=1&_from=&_ipg=&_trksid=p3686

தீபாவளி ஸ்பெஷல் 2013 !அவ்வளவுதான் நண்பர்களே! வருகைதந்த அனைவருக்கும் நன்றி! இத்தளம் குறித்த உங்கள் மேலான கருத்துகளை பின்னூட்டங்களாக வெளிப்படுத்தினால் மகிழ்வேன்! மீண்டும் சந்திப்போம்!!!20 comments:

 1. அண்ணனின் அதிரடி பதிவில் முதல் துண்டு.

  ReplyDelete
 2. //சில சர்ச்சைகள் தொடரவேண்டுமென்று எடிட்டர் விஜயன் விரும்பியே இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்படுகிறதோ?//

  பத்த வச்சிட்டீங்களே பரட்டை !!!!!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. // பத்த வச்சிட்டீங்களே பரட்டை !!!!!!!!!!!!!!!!!!!!!!! //

   எதையாவது பத்தவைப்பதுதானே இப்போதைய ட்ரண்ட் ஜி ! :)

   Delete
 3. கார்த்தி,

  உங்களோட முதல் பதிவையே அணு அணுவா ரசிச்சு இன்னமும் முழுசா படிச்சு முடிக்கல!! அதுக்குள்ள இன்னொரு அட்டகாசமான பதிவா? :) இருங்க வந்துட்டேன்.... :)

  ReplyDelete
 4. //மேஃப்ளவர் ! இந்த வார்த்தை உங்களுக்கு எதை ஞாபகப்படுத்துகிறது? //
  யூ மீன் காலிஃப்ளவர்?! :)

  அப்படின்னு காமெடி பண்ணலாம்னு பாத்தா, ரொம்பவே சீரியஸா அமெரிக்க வரலாறு சொல்றீங்க!!

  //கதாசிரியர்கள் அவரையும் நம்மையும் நிம்மதியாக விடப்போவதில்லை என்று தெளிவாகிறது//
  அவர் தாத்தா ஆனாக் கூட விட மாட்டாங்க போலயே?

  //என்னைப்போன்றவர்கள் இதன் ஒரிஜினல் ஆல்பங்களை படிக்காமல், முதல்முறையாக தமிழில் படிக்கும்போது இத்தொடர் மிகப்பெரிய வரவேற்பைப்பெறும் என்பதில் ஐயமில்லை! //
  +1

  இரத்தப் படலம் புக்கை இன்னமும் படிக்கலைங்க! அதான், நீங்க க.சு. போட்டிருக்கிற பகுதியை அப்படியே லாங் ஜம்ப் பண்ணிட்டேன்! :) அருமையா எழுதி இருக்கீங்க, இதே போல தொடர்ந்து பதிவுகள் போடலாமே?!

  ReplyDelete
  Replies
  1. //அவர் தாத்தா ஆனாக் கூட விட மாட்டாங்க போலயே?//

   அவரு இன்னும் இளமையாதான் இருக்காரு. படிக்கிறவங்கதான் தாத்தாவாகிட்டு இருக்காங்க! :)

   Delete
 5. ஓ குடியேறிதான் மேஃப்ளவர் கப்பல் அங்கு கரை ஒதுங்குச்சா? தெளிய வச்சதுக்கு. நன்றி தோழரே பதிவு அருமை.

  ReplyDelete
 6. அமெரிக்க வரலாறில் தொடங்கி அழகாக கதை(யை முடிக்காமல்) சொல்லியிருக்கிறீர்கள் கார்த்திகேயன்!

  கார்திக்கைப் போலவே இக்கதையை நானும் இன்னும் படிக்கவில்லை! :(

  நல்ல பதிவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வது தமிழ் காமிக்ஸின் ஆரோக்கியமான பாதையைக் காட்டுகிறது. தொடர்ந்து கலக்குங்கள்! :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே !

   Delete
 7. பதிவிற்கு நன்றி நண்பரே ...
  மீண்டும் ஒரு "நீண்ட "கால தொடரா என்ற தயக்கத்தில் தான் படிக்க ஆரம்பித்தன் .அழகான ஓவியங்களும் ,விறுவிறுப்பான கதையும் அதை மறக்க செய்தன .
  ஆனால் படித்து முடித்தவுடன் "நீண்ட கால "காத்திருப்பை நினைத்து மீண்டும் பெரு மூச்சை விட வைக்கிறது .

  ReplyDelete
  Replies
  1. வாங்க பரணி சார்! தங்கள் கருத்துக்கு நன்றி!

   Delete
 8. எனக்கு என்னமோ இந்த தொடர் ஓகே என்றே தோன்றுகிறது. காரணங்களை என் பதிவில் பாருங்கள். அப்பாடா நம்ம பதிவுக்கு ஆள் பிடிச்சாச்சு.

  தொடர்ந்து பதிவிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பதிவுக்கு ஆர்வமுடன் காத்திருக்கிறேன் நண்பரே!

   Delete
 9. வணக்கம்

  பதிவு மிக வரலாற்று குறிப்புக்களுடன் உள்ளது ...வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே!

   Delete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. Beautiful & Nice Dresses, Salwar-Kameez & many more………
  Salwar-Suit

  ReplyDelete
 13. Exclusive Collection of Salwar Suit And Many More….
  We Have Some For You In Your Budget For more…..
  Plz visit:- Printed Anarkali Salwar Suit

  ReplyDelete