நண்பர்களே, மீண்டும் ஒரு புதியபதிவில் உங்களைச் சந்திப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சியே. எனது முதல் பதிவிற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்குமென்று நான் நினைக்கவேயில்லை! நன்றி நண்பர்களே!!! இதற்கெல்லாம் காரணம், நாம் அனைவரும் தமிழ் காமிக்ஸ் மீது கொண்டுள்ள அளப்பறியா காதல் என்பதே என் கருத்து.
இங்கே ஒன்று குறிப்பிட்டாக வேண்டும். இந்த தளத்தை அழகாக வடிவமைக்க உதவியவர் நண்பர் "ஷி நா பா" சௌந்தர் அவர்கள். அதேபோல் முதல் பதிவில் இடம்பெற்ற ஸ்கேன்களை அழகாக மெருகூட்டி தந்தவர் சீனியர் பதிவர் நண்பர் "கிங்" விஸ்வா அவர்கள். நன்றி நண்பர்களே.
வாருங்கள் 2012 ல் வெளியான லயன், முத்து, காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களை மீண்டும் ஒரு முறை புரட்டிப் பார்ப்போம்.
வாருங்கள் 2012 ல் வெளியான லயன், முத்து, காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களை மீண்டும் ஒரு முறை புரட்டிப் பார்ப்போம்.
2012 - மாயன் உபயத்தால் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட ஆண்டு. அதேபோல் தமிழ் காமிக்ஸ் சரித்திரத்தில் ஒரு மறக்கமுடியாத ஆண்டு 2012 என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆம் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் ஆசைகள் ஏக்கங்கள் நிராசையாக கானல்நீராக போய்விடுமோ என்றிருந்த நேரத்தில், "இல்லை இனிமேல்தான் மெயின் பிக்சரே இருக்கு, இதோ சாம்பிள்" என்று COMEBACK மூலம் அதிரடியாக நுழைந்து, NEVER BEFORE SPECIAL என்ற திருவிழாவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் எடிட்டர் விஜயன் அவர்கள்.சுருக்கமாகச் சொன்னால் காமிக்ஸ் கலாட்டாக்களுக்கு இந்த ஆண்டு பஞ்சமே இல்லாமல் இருந்தது.
காமிக்ஸ் கண்ணோட்டம் 2012
2012 ல் வெளியான லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் மற்றும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களை பார்ப்போம்.
லயன் காமிக்ஸ்
1. Come Back ஸ்பெஷல் - ஜனவரி - மொத்த பக்கங்கள் 204
2. சாத்தானின் தூதன் டாக்டர் 7 - ஏப்ரல் - மொத்த பக்கங்கள் 96 (கருப்பு வெள்ளையில்) - பிலிப் காரிகன் சாகசம்
3. New Look ஸ்பெஷல் (28 வது ஆண்டுமலர்) - ஜூலை - 152 பக்கங்கள் (color 100 + b/w 50)
4. Double Thrill ஸ்பெஷல் - ஆகஸ்ட் - மொத்த பக்கங்கள் 156
இந்த இதழில் இடம் பெற்ற கதைகள்.
5. Super Hero Super ஸ்பெஷல் - அக்டோபர் - கருப்பு வெள்ளையில் 308 பக்கங்கள்
ஜூலை 2012 |
1. Come Back ஸ்பெஷல் - ஜனவரி - மொத்த பக்கங்கள் 204
2nd இன்னிங்சை இனிதே துவக்கிவைத்த இந்த இதழில் ஐந்து கதைகள் இடம்பெற்றன.
கதை நெ . 1 - ஒற்றர்கள் ஓராயிரம் - 44 வண்ணப்பக்கங்கள் - லக்கி லூக் சாகசம்
கதை நெ . 2 - கானகத்தில் களேபரம் - 51 வண்ணப்பக்கங்கள் - கேப்டன் பிரின்ஸ் சாகசம்
கதை நெ . 3 - டாக்டர் மாக்னோ - 54 b/w பக்கங்கள் - இரும்புக்கை மாயாவி சாகசம்
கதை நெ . 4 - சிறையில் ஒரு சீமாட்டி - 15 b/w பக்கங்கள் - பிலிப் காரிகன் சாகசம்
கதை நெ . 5 - கண்ணாமூச்சி ரே ரே - 23 b/w பக்கங்கள் - இரும்புக்கை மாயாவி சாகசம்
2. சாத்தானின் தூதன் டாக்டர் 7 - ஏப்ரல் - மொத்த பக்கங்கள் 96 (கருப்பு வெள்ளையில்) - பிலிப் காரிகன் சாகசம்
3. New Look ஸ்பெஷல் (28 வது ஆண்டுமலர்) - ஜூலை - 152 பக்கங்கள் (color 100 + b/w 50)
இந்த இதழில் இடம்பெற்ற கதைகள் வருமாறு.
கதை நெ . 1 - பனியில் ஒரு கண்ணாமூச்சி - 44 வண்ணப்பக்கங்கள் - லக்கி லூக் சாகசம்
கதை நெ . 2 - ஒரு வானவில்லைத் தேடி - 44 வண்ணப்பக்கங்கள் - லக்கி லூக் சாகசம்
கதை நெ . 3 - மனித வேட்டை- 18 பக்கங்கள் - பிலிப் காரிகன் சாகசம்
கதை நெ . 4 - மரண முரசு - 15 பக்கங்கள் - ஜான் ஸ்டீல் சாகசம்
மற்றும் 4 பக்க குண்டன் பில்லி சிறுகதை
கதை நெ . 4 - மரண முரசு - 15 பக்கங்கள் - ஜான் ஸ்டீல் சாகசம்
மற்றும் 4 பக்க குண்டன் பில்லி சிறுகதை
4. Double Thrill ஸ்பெஷல் - ஆகஸ்ட் - மொத்த பக்கங்கள் 156
இந்த இதழில் இடம் பெற்ற கதைகள்.
கதை நெ . 1 - பரலோகப்பாதை பச்சை - 45 வண்ணப்பக்கங்கள் - கேப்டன் பிரின்ஸ் சாகசம்
கதை நெ . 2 - பனியில் ஒரு பரலோகம் - 43 வண்ணப்பக்கங்கள் ரிப்போர்டர் ஜானி சாகசம்
கதை நெ . 3 - கொலைகார பொம்மை - 43 B/W பக்கங்கள்
5. Super Hero Super ஸ்பெஷல் - அக்டோபர் - கருப்பு வெள்ளையில் 308 பக்கங்கள்
இந்த இதழில் இடம்பெற்ற கதைகள் வருமாறு.
கதை நெ . 1 - எட்டுக் கர எத்தன் - 182 பக்கங்கள் - இரும்புக்கை மாயாவி சாகசம்
கதை நெ . 2 - அரக்கன் ஆர்டினி - 60 பக்கங்கள் - ஸ்பைடர் சாகசம்
கதை நெ . 3 - ராட்சஸத் தேள் மர்மம் - 49 பக்கங்கள் - இரும்பு மனிதன் ஆர்ச்சி சாகசம்
ஆகஸ்ட் 2012 |
செப்டம்பர் 2012 |
நவம்பர் 2012 |
அக்டோபர் 2012 |
முத்து காமிக்ஸ்
1. விண்ணில் ஒரு குள்ளநரி - பிப்ரவரி 2012 - விங் கமாண்டர் ஜார்ஜ் சாகசம்.
அழகிய அவஸ்தை - ரோஜர் மூர் சாகசம்
2. Surprise ஸ்பெஷல் - மே - 156 பக்கங்கள்
இந்த இதழில் இடம்பெற்ற கதைகள் வருமாறு.
கதை நெ . 1 - என்பெயர் லார்கோ - 48 வண்ணப்பக்கங்கள் - லார்கோ வின்ச் சாகசம்
கதை நெ . 2 - யாதும் ஊரே யாவரும் எதிரிகள் - 45 வண்ணப்பக்கங்கள் - லார்கோ வின்ச் சாகசம்
கதை நெ . 3 - திகில் கதைகள் - 48 பக்கங்கள் - மறுபதிப்பு
3. சிகப்புக் கன்னி மர்மம் மற்றும் தற்செயலாய் ஒரு தற்கொலை - ஜூன்
4. Wild West ஸ்பெஷல் - செப்டம்பர் - 140 பக்கங்கள்
மாதம் வெளிவந்த இந்த இரண்டு கதைகளில் டிடெக்டிவ் ஜெரோம்
அறிமுகமானார்.
இந்த இதழில் இடம்பெற்ற கதைகள் வருமாறு.
கதை நெ . 1 - எமனின் திசை மேற்கு - 58 வண்ணப்பக்கங்கள் - கிராபிக் நாவல்
கதை நெ . 2 - மரண நகரம் மிசௌரி - 45 வண்ணப்பக்கங்கள் - கேப்டன் டைகர் (ப்ளுபெர்ரி) சாகசம்
கதை நெ . 3 - ஒரு பனி வேட்டை - 11 பக்கங்கள் - ஸ்டீவ் சாகசம்
5. கேப்டன் டைகரின் தங்கக்கல்லறை - நவம்பர் - 150 பக்கங்கள்
98 வண்ண பக்கங்களில் தங்கக்கல்லறை இரண்டு பாகங்களும் -
(மறுபதிப்பு). கருப்பு வெள்ளையில் திகில் கதைகள் - மறுபதிப்பு
6. மரணத்தின் நிசப்தம் - டிசம்பர் - 98 B/W பக்கங்களில் ரிபோர்ட்டர் ஜானி சாகசம்.
ஜூன் 2012-Part 2 |
ஜூன் 2012-Part 1 |
காமிக்ஸ் கிளாசிக்ஸ்
ஜனவரி 2012 |
1. கொலைகாரக் கலைஞன் -
ஜனவரி 2012 - ஜானி நீரோ
மார்ச் 2012 |
2. தலைவாங்கிக் குரங்கு - மார்ச் 2012 - டெக்ஸ் வில்லர்
பிப்ரவரி 2012 |
2012 ல் வெளியான இதழ்களில் பெரிய சச்சரவுகளை ஏற்படுத்திய பெருமை "தங்கக் கல்லறை" மற்றும் "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" இதழ்களுக்கே சேரும்.
ஆனால் விற்பனையில் சுறுசுறுப்பாக இருந்ததும் இந்த இரண்டு இதழ்களே என்று ஆசிரியர் விஜயன் கூறியிருக்கிறார்.
ஏப்ரல் 2012 |
2012-ல் தான் காமிக்ஸ் வாசகர்களால் இணைய உலகம் பிஸியாக இருந்தது என்றால் மிகையாகாது. நிறைய காமிக்ஸ் வலைப்பூக்கள் தொடங்கப்பட்டதும் இந்த ஆண்டில்தான்.
டிசம்பர் 2012 |
உண்மையான காமிக்ஸ் கலாட்டாக்களுக்கு எடிட்டர் விஜயன் சார் ப்ளாக் மற்றும் சென்ற பதிவில் குறிப்பிட்ட நண்பர்களின் ப்ளாக்களையும் பாருங்கள். காமிக்ஸ் என்பது சிறுபிள்ளைத்தனமானது இல்லை என்பது புரியும்.
நண்பர்களே இந்தப் பதிவு ஒரு நினைவுகூறும் சிறு பார்வைதானே தவிர, விமர்சனப் பதிவு அல்ல. மேலும் தமிழில் பிற நிறுவனங்கள் (அப்படி ஒன்று இருக்கா!) வெளியிட்ட காமிக்ஸ்களை இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவற்றிற்கான தகவல்களுக்கு பிற நண்பர்களின் வலைப்பூவை அணுகவும்.
வருக வருக 2013
மிகப்பெரிய கொண்டாட்டத்துக்குத் தயாராகுங்கள்
மிகப்பெரிய கொண்டாட்டத்துக்குத் தயாராகுங்கள்
நன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
HAPPY NEW YEAR 2013 FRIENDS
வருகை தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் மேலான கருத்துகளை இனிய தமிழில் தெரிவிக்க உதவிக்கு இங்கே கிளிக் செய்யவும்.