2000 ம் ஆண்டு - கனரா பேங்க் தன் விரிவாக்கப்பணிகளுக்காக ரூ.10/-
முகமதிப்புக்கொண்ட பங்குகளை (Shares) பொதுமக்களுக்கு வெளியீட்டு பணத்தேவையை
பூர்த்திசெய்துகொண்டது. அப்போது மாதக்கடைசி என்பதால் நான் Salary
ப்ரிபரெஷன் வேளையில் பிசியாக இருந்தேன். பங்குகளை வாங்க கடைசி நாள்
என்பதால், நடுவில் கிடைத்த ஒரு மணிநேரத்தில் கனரா பேங்க் சென்று கையில்
இருந்த பணத்தில் 400 பங்குகளை வாங்கிபோட்டேன். என் வாழ்நாளில் சேமிப்பு
என்று செய்த முதல் நல்லகாரியம் இதுதான். ஷேர் வாங்கவேண்டும் என்று என் மனதில் தோன்றக்காரணம் நான் படித்த சப்ஜெக்ட் அப்படி. அதன் பிறகு அதை நான் மறந்தும்போனேன். ஆனால் நான் இன்வெஸ்ட் பண்ண 14000
ரூபாய்க்கு வருடம்தோறும் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தவறாமல்
டிவிடெண்ட் வந்துகொண்டிருந்தது.
2007 ம் ஆண்டு - நான் புதிதாக வீடு கட்ட ஆரம்பித்தபோது, நடுவில்
பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது என் ஷேர்கள் ஞாபகம் வந்தது. பங்குகளை
விற்கவேண்டுமென்றால் Demat கணக்கு இருக்கவேண்டும். எனவே நானும் என் நண்பன்
ஒருவனும் ICICI பேங்க் ல் ஆளுக்கொரு Demat Trading அக்கௌன்ட் ஆரம்பித்தோம்.
அந்தசமயம் இந்தியன் ஷேர் மார்க்கெட் நன்றாக இருந்தது. அப்போது கனரா பேங்க்
ஷேர் ஒன்று ரூ. 350/- க்குமேல் போனது. உடனே நான் என்னுடைய ஷேர்களை
ட்ரேடிங் அக்கௌன்ட் க்கு மாற்றி என் 400 ஷேர்களையும், ஒரு ஷேர் ரூ.342/-
க்கு விற்பனை செய்தேன். அன்றிலிருந்து இன்றுவரை icicidirect.com ல் ஆன்லைன்
ட்ரேடிங் செய்துகொண்டிருக்கிறேன். பங்குச்சந்தை மற்றும் இந்திய
நிறுவனங்களை பற்றியும் நிறைய தெரிந்துகொண்டேன். என் அக்கௌண்டில் 15 க்கும்
மேற்ப்பட்ட நிறுவனங்களின் ஷேர்கள் சிறிய அளவில் இருக்கின்றன.
இவன் சுயபுராணங்களை யார் கேட்டது, என்று நீங்கள் எரிச்சலாவது புரியுது. ஓகே விஷயத்திற்கு வருகிறேன். சமிபத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த முத்து காமிக்ஸ் 40 வது ஆண்டுமலர் நெவர் பிபோர் ஸ்பெஷல் புத்தகத்தில் முதல் மற்றும் இரண்டாவது கதையான, லார்கோ வின்ச் சாகசம் - கான்கிரீட் கானகம் மற்றும் சுறாவோடு சடுகுடு படித்தபோது சந்தோஷமாகவும், என் ஷேர் மார்க்கெட் அனுபவங்களை அசைபோட காரணமாக அமைந்தது.

இந்தகதைகளில் மெல்லிய நகைச்சுவை ஆங்காங்கே
எட்டிப்பார்ப்பதை உணரலாம். அதிலும் அந்த முதிர் அழகி லிஸ்ஸா லூ கேரக்டர்
ரொம்பவே அலாதியானது.
இந்தக்கதைத் தொடரில் எனக்கு மிகவும் கவர்ந்த ஒன்று மொழிபெயர்ப்பு. முதல் இரண்டு பாகங்களைவிட இதன் தமிழ் பொழிபெயர்ப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
லார்கோ தொடரின் ஒரிஜினலை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். அதையும் இந்த தமிழ் வடிவையும் ஒப்பீடு செய்யவிரும்பவில்லை. ஆனால் தமிழில் படிப்பதே எனக்கு முழு நிறைவை தருகிறது.
இந்தக்கதைத் தொடரில் எனக்கு மிகவும் கவர்ந்த ஒன்று மொழிபெயர்ப்பு. முதல் இரண்டு பாகங்களைவிட இதன் தமிழ் பொழிபெயர்ப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
லார்கோ தொடரின் ஒரிஜினலை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். அதையும் இந்த தமிழ் வடிவையும் ஒப்பீடு செய்யவிரும்பவில்லை. ஆனால் தமிழில் படிப்பதே எனக்கு முழு நிறைவை தருகிறது.
Never Before Special இப்போது ebay இல் கிடைக்கிறது. அதற்கான ஆன்லைன் முகவரி http://www.ebay.in/itm/Muthu-Comics-NEVER-BEFORE-SPECIAL-/221176884780?pt=IN_Books_Magazines&hash=item337f2b6e2c
NBS வெளியான ஜனவரி 11 எனக்கு ஒரு மறக்கமுடியா நாள். அன்றுதான் முகமறியா காமிக்ஸ் வாசக பிரபலங்களை சந்தித்த மறக்கமுடியாத நாள்.
NBS வெளியான ஜனவரி 11 எனக்கு ஒரு மறக்கமுடியா நாள். அன்றுதான் முகமறியா காமிக்ஸ் வாசக பிரபலங்களை சந்தித்த மறக்கமுடியாத நாள்.


ஓகே நண்பர்களே மீண்டும் விரைவில் சந்திப்போம். நன்றி.
வந்தோம்ல பஸ்ட்
ReplyDeleteவாங்க. வாங்க.. :)
Deleteஇனிமேல் 'ஸ்டாக் மார்கெட் ஸிங்கம்' என அழைக்கப்படுவீர்களாக!!! :) வயதான தொழிலதிபரான உங்களுக்கு முதிர் அழகிகள் மேல் கவனம் செல்வதில் வியப்பேதும் இல்லைதான்! ;)
ReplyDeleteஹா! ஹா! ஹா! காமெடியில் இது தனி வகை! முடியலப்பா முடியல கார்த்தி! உங்க கூட காலேஜ் படிச்சவங்கல்லாம் அய்யோ பாவம்! சிரித்து சிரித்தே பெட்ல அட்மிட் ஆகியிருப்பாங்க!
Delete// 'ஸ்டாக் மார்கெட் ஸிங்கம்' //
ReplyDeleteஅது என்ன ஸிங்கம் கார்த்திக் ? சிங்கம் தான் ஸிங்கம் ஆகி விட்டதா :)
@ கார்த்திகேயன்: வழக்கமான நல்ல பதிவு நண்பரே. உங்களது ஷேர் மார்கெட் வரலாற்றில் நமது லார்கோ போல எப்பொழுதாவது மாட்டி விழி பிதுங்கியது உண்டா?
ஸ்டாக் ஸிங்கம் :)
Deleteஎன் ஷேர் மார்கெட் அனுபங்கள் எழுதனும்னா ஒரு 10 பதிவாவது போடவேண்டிவரும். :) அவ்வளவு இருக்கு. :)
DeleteThanks for sharing this blog for more entertainment nice blog.. here some relevant entertainment point view this site..
ReplyDeleteAdult Comics|Heroines in Peril this is for entertainment comix site you can read many stories. if you want enjoy with this comex (http://comixxxstore.com/) site please visit this site and you may go to contact page.
ஷேரிங் அருமை. வயதான முதிர் கன்னியை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டதுக்கு. ஹி ஹி...
ReplyDeleteஷேரிங் அருமை. வயதான முதிர் கன்னியை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டதுக்கு. ஹி ஹி...
ReplyDelete