Saturday 11 January 2014

காமிக்ஸ் பொங்கல்!

தல-தளபதி என்று இந்த வருடப் பொங்கல் பட்டையை கிளப்பிகொண்டிருக்க, நமக்கும் அதற்கு ஈடாக காமிக்ஸ் ரிலிஸ் என்று சந்தோஷப் பொங்கலாகவே மாறிவிட்டது என்றால் மிகையில்லை! 2013 ல் 400 ரூபாய் NBS பிரமிப்பு என்றால், இந்தவருடம் நான்கு புத்தகங்களின் பிரமிப்பு! 

இதோ கை நிறைய காமிக்ஸ்! :)

  

இதில் நான் உடனே படித்தது “யுத்தம் உண்டு... எதிரி இல்லை...” புத்தகமே! இந்த இதழைபற்றிய எனது சிறு விமர்சனப் பதிவே இது!


எடிட்டரின் ‘ஹாட் லைன்’ பக்கங்கள்!


கதை!


 கமான்சே எனும் பெண்ணுக்கு சொந்தமான ஒரு நொடிந்துபோன பண்ணையில் வேலை (உதவி) செய்பவர்தான் கதையின் நாயகன் ரெட் டஸ்ட். இவருக்கு கீழே மூன்று சோப்ளாங்கி உதவியாளர்கள்! இவர்களுக்கு ’பல்கா’ ஆர்டர் ஒன்று கிடைக்கிறது! அதாவது, ரயில் பாதை அமைக்கும் பணியாளர்களுக்கு மாட்டிறைச்சி சப்ளை பன்னுவதே அந்த ஒப்பந்தம்! ஆர்டரை நிறைவேற்றும் சமயம், செயன்னீக்கள் (செவ்விந்தியர்கள்) வெள்ளையர்களுடன் தாங்கள் போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி, அவர்களுக்கு தரவேண்டிய உணவு வராததால், அதனால் கோபமுற்று, கமான்சேயின் பண்ணையை தாக்கி, அவர்களின் மாடுகளை கவர்ந்து சென்றுவிடுகிறார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தங்கள் மாடுகளை மீட்டுவரும் நோக்கத்தில் செயன்னீயர்களின் குடியிருப்புக்கு செல்கிறார்கள் ரெட்டும், கமான்சேவும். செயன்னீக்களின் உணவு பிரச்சனையை தீர்ப்பதாக, ரெட் அவர்களிடம் மூன்று நாட்கள் அவகாசம் கேட்கிறார். நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கமான்சேவை பினையாக வைத்துக்கொண்டு அதற்கு சம்மதிக்கிறார்கள்.

மூன்று தினங்களில் ரெட் பிரச்சனையை தீர்க்கிறாரா? செயன்னீக்களிடம் கைதியாக இருக்கும் காமான்சேவின் நிலை என்னானது?  உணவுக்காக காத்திருக்கும் ரயில் பணியாளர்களின் முடிவு என்ன? என்பதை மீதி வண்ணப்பக்கங்களில் கண்டு, படித்து மகிழுங்கள்! 

 

 

நிறைகள்!

  • 60 பக்கங்கள் கொண்ட இந்த இதழின் அட்டைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! 
  • கையில் பிடித்து படிப்பதற்க்கு வசதியாகவும் இருக்கிறது! 
  • அனைவரையும் கவரும் அட்டகாசமான, தெளிவான ஆர்ட்வொர்க்!
  • இக்கதையுடன் பக்க நிரப்பியாக வந்துள்ள லக்கி லுக்கின் சிறுகதை  ”ஒரு இரயில் பயணம்” உண்மையிலேயே சூப்பர்! 

குறைகள்!

  • கதை-எந்த அதிரடி திருப்பமும் இல்லாமல், ஏதோ டாகுமெண்டரி போல் தோன்றுவது எனக்கு மட்டும்தானா?!
  • சவசவ என முடியும் கதையின் கிளைமாக்ஸ்!
  • உள் பக்கங்களில் சில பக்கங்கள் பளிச்சென்றும், அதே சமயம் சில பக்கங்கள்  டல்லாகவும் இருக்கிறது!
  • புத்தகம் 60 பக்கங்கள் மட்டுமே என்பதால், முப்பது நிமிடங்களில் படிப்பதற்கு போதுமானதாக தோன்றுவது ஒரு பெரிய குறையாகத் தெரிகிறது!

காமிக்ஸ் மினி டாட் காம்!

1.  கடந்த ஆண்டு நண்பர்களுடன் புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தது ஒரு இனிய அனுபவமாக இருந்தது! ஆனால், இந்த முறை கலந்துகொள்ள முடியாமல் போனது வருத்தமே! அந்த குறையை நண்பர் விஷ்வா அவர்களின் புத்தக கண்காட்சி அப்டேட் பதிவுகள் தீர்த்துவைப்பது சந்தோஷமாக உள்ளது!


2.   நண்பர் ‘முதலைப்பட்டாளம்’ கலீல் அவர்கள் தொடர்ந்து பதிவுகள் இட்டு வருவது மிகவும் சந்தோஷத்தை தருகிறது! இதோ அவரின் பொங்கல் புத்தகங்களின் பதிவு ஒன்று!



3.    அதிரடி பதிவர் நண்பர் ஜானி அவர்கள் புத்தாண்டு பரிசாக ராணி காமிக்ஸில் வெளிவந்த ஒரு கதையை முழுவதும் அழகாக ஸ்கேன் செய்து போட்டுள்ளார்! அவருக்கு என் நன்றி!

http://johny-johnsimon.blogspot.in/2014/01/blog-post.html

4.   நண்பர் பரனிதரன் அவர்களின் இந்த மாத இதழ்களின் அழகான விமர்சணப் பதிவு!

http://baraniwithcomics.blogspot.in/2014/01/blog-post.html


வருகை தந்த அனைவருக்கும் நன்றி நண்பர்களே!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!